பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் என்பவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் இருந்து…
நானும் மனிதன்தான்…
நான் முதலமைச்சராக ஆனபோது, எனது ஒரு உரையில், எனது முயற்சியில் எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டேன் என்று கூறியிருந்தேன். இரண்டாவதாக, நான் எனக்காக எதையும் செய்ய மாட்டேன். மூன்றாவதாக, நான் ஒரு மனிதன், நான் தவறு செய்யலாம், ஆனால் நான் கெட்ட எண்ணத்துடன் தவறு செய்ய மாட்டேன். நான் அவற்றை என் வாழ்க்கையின் மந்திரங்களாக ஆக்கினேன். தவறு செய்வது இயற்கையானது, நான் ஒரு மனிதன், நான் கடவுள் இல்லை, ஆனால் வேண்டுமென்றே தவறு செய்ய மாட்டேன்.
ஜி ஜின் பிங் எனது நண்பர்
எனக்கும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது. சீனப் பயணியும், தத்துவ ஞானியுமான யுவான் சுவாங், குஜராத்தில் என்னுடைய கிராமத்துக்கு வசித்திருக்கிறார். இதுதொடர்பான திரைப்படம் தயாராகி வருவதாக நான் கேள்விப்பட்டு, சீன தூதரத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். யுவான் சுவாங் குறித்த அந்தப் படத்தில் எங்களுடைய கிராமத்தின் பெயரும் இடம்பெறவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
2014-ல் நான் பிரதமரானபோது, பல்வேறு உலக தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்தினேன். அப்போது சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் என்னை அழைத்து வாழ்த்தினார். அப்போதுதான் அவர் குஜராத்திலுள்ள எங்கள் கிராமமான வத் நகருக்கு வர விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கும், எனக்கும் சிறப்புப் பிணைப்பு இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவுக்கு யுவான்சுவாங் வந்தபோது நீண்ட காலம் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தார் என்பதை ஜீ ஜின்பிங். இப்படித்தான் எனக்கும், அவருக்கும் இடையே பிணைப்பு உள்ளது.
உணவுப் பழக்கம்
நான் உணவுக் காதலன் அல்ல. நான் செல்லும் நாட்டில் என்ன உணவு பறிமாறப்படுகிறதோ அதை நான் உண்பேன். என்னிடம் உணவு மெனுவை யாரேனும் கொடுத்தால் என்னால் அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாது. மெனுவில் இருக்கும் உணவைத்தான் என் தட்டில் வைத்திருக்கிறார்களா என்பதைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியாது. உணவைத் தேடித்தேடி உண்ணும் பழக்கம் இல்லாததால் எனக்கு அதைப் பற்றித் தெரியாது.
நான் ஆர்எஸ்எஸ்-ஸில் இருந்தபோது நானும் அருண் ஜேட்லியும் உணவகங்களுக்குச் சென்றால் நான் அவரைத் தான் எனக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்யச் சொல்வேன். நான் உண்ணும் உணவு சைவ உணவாக இருக்க வேண்டும். அது மட்டுமே எனது தெரிவாக இருக்கும்.
கோத்ரா சம்பவம்
கோத்ராவில் நடந்த அந்த பெரிய சம்பவம் எனக்கு தெரிய வந்தது. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. படிப்படியாக மக்கள் இறந்தது தெரிய வந்தது. நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். கவலை கொண்டிருந்த நிலையில், சட்டசபையில் இருந்து வெளியே வந்தவுடன், நான் கோத்ராவுக்குச் செல்ல விரும்புவதாகச் சொன்னேன். அதற்காக முதலில் வதோத்ராவிற்கு செல்வோம் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோத்ரா செல்வோம் என்றேன். ஆனால், அங்கு ஹெலிகாப்டர் இல்லை என்று அவர்கள் கூறினர்.
ஆனால், எங்கிருந்தாவது அதை தயார்படுத்துங்கள் என்று கூறினேன். ஒஎன்ஜிசி நிறுவனத்திடம் ஒன்று இருந்தது என்று நினைக்கிறேன்.அது ஒரு சிங்கிள் இன்ஜின் ஹெலிகாப்டர். ஆனால், நாங்கள் விஐபிக்களை அழைத்துச் செல்ல மாட்டோம் என்றனர். ஆனால், நான் விஐபி அல்ல, சாதாரண மனிதன் மட்டுமே வாங்கள் செல்வோம் என்றேன்.
நான் கோத்ராவை அடைந்தேன். இப்போது, அந்த வலிமிகுந்த பார்வையுடன், பல உடல்கள் எரிந்து கிடந்தன. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நானும் ஒரு மனிதன், நானும் ஒரு மனிதன் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்குமல்லவா. ஆனால் இந்த பதவியில் இருப்பதால், நான் என் உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒரு மனிதனாக என் இயல்பான போக்கை நான் கையாள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.