ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளித்துள்ள சில விமர்சன்ங்கள்…
மாடர்ன் திராவிடன்
கேம் சேஞ்சர் – பெரிதாக எதிர்பார்க்காமல் போனேன், ஆனால் படம் நன்றாக இருந்தது. கதை என்னவாகும் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும், சலிப்பு தட்டவில்லை.
அப்பண்ணாவாக ராம் சரண் படத்தின் உயிர்நாடியாக இருக்கிறார். அந்த அப்பண்ணா கதாபாத்திரம் ஒரு அரசியல் தலைவரை நினைவூட்டும். எஸ் ஜே சூர்யா தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
இந்தியன் -2 உடன் ஒப்பிட்டால் நல்லாவே இருக்கு படம். ஆந்திராவில் ஓடிவிடும். தமிழில் கொஞ்சம் கஷ்டம். காரணம் வழக்கம் போல சில ஷங்கர் ஓலாக்கள் இருக்கு.
ஆனா இரண்டு பாட்டு – ஜகரண்டி, தோப்,பாட்டு இரண்டும் ஸ்கிரீன்ல அருமையாக இருக்கு.
சின்ன சின்ன ஆசை
இயக்குனர் ஷங்கரிடம் சரக்கு இல்லை என்பதும் அவர் ‘இந்தியன் 2’ படத்தின் தோல்வியை கண்டு கூட திருந்தவில்லை என்பதும் கேம் சேஞ்சர் படத்தில் இருந்து தெரிகிறது.
இந்த கால ரசிகர்களுக்காக படம் எடுத்ததாக கூறி இருக்கும் ஷங்கர் ஒரு காட்சியை கூட அதை செய்யவில்லை என்பதுதான் பெரிய வருத்தம். கார்த்திக் சுப்புராஜின் அசத்தலான கதை இருந்தாலும், அதற்கு மோசமான திரைக்கதையை ஷங்கர் கொடுத்துள்ளதால் இந்த படத்தில் ஒரு காட்சி கூட பார்க்கும் வகையில் இல்லை.
ராம்சரண் தேஜா ஆரம்பத்தில் கோபக்காரராகவும், அதன் பின்னர் காதலியால் ஐபிஎஸ் படித்து வந்து, அந்த கோபத்தை ஊழல்வாதிகள் மீதும் காட்டுவதிலும் ஐபிஎஸ் மிடுக்கையும் சரியாக வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஹீரோ அறிமுக காட்சி என்பது சலிக்க வைக்கும் அளவுக்கு நீளமான சண்டை காட்சிகள் தலைவலியை உண்டாக்குகின்றன. இசை இரைச்சல் பெரும் தலைவலி
கோடங்கி:
மாமா மரணத்தை அடுத்து நடந்த தேர்தலில் மருமகன் முதல்வர் ஆனதை ஆந்திராவில் நிஜத்தில் பார்த்து இருக்கிறோம்.
அப்பாவை கொன்று முதல்வர் ஆகும் மகன் கடைசியில் என்ன ஆகிறார் என்பதை சொல்லும் கதைதான் ஷங்கரின் #கேம்சேஞ்சர்
தெலுங்கு வாசனை தூக்கலாக மித மிஞ்சி இருப்பதாலும், என்ன சொல்ல வருகிறோம் என்ற தெளிவு இல்லாததாலும், வெறும் பிரமாண்டத்தை மட்டும் வைத்து இனி உருட்ட முடியாது என்பதையும் இயக்குனர் ஷங்கருக்கு புரிய வைத்து, அவரின் சினிமா கேம் சேஞ் ஆகும் படம் தான் #GameChanager
காளையன்;
இந்தியன் 2 பரவல்லங்கற..
கேம் சேஞ்சர் பாத்துட்டு வர்றதான.
Prof. H A B I L E
இந்த மொக்க கேம் சேஞ்சர் படத்த பாத்தே பயந்து postpone பண்ணிருக்கான்னா அப்போ விடாமுயற்சி எப்டி இருக்கும்