No menu items!

காற்று  உள்ள வரைக்கும்.. பாடகர் ஜெயச்சந்திரன் நினைவுகள்!

காற்று  உள்ள வரைக்கும்.. பாடகர் ஜெயச்சந்திரன் நினைவுகள்!

பிரபல பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 வயதில் காலமானார். ஒரு வருடத்திற்கும் மேலாக கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் காலமானார்.

மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்ததை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பி. ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தில், பதினாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய சினிமாவிற்கு வழங்கியுள்ளார். திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் அவரது இனிமையான குரல் எதிரொலித்தது. பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது வாழ்நாள் முழுவதும், தென்னிந்திய இசைத் துறையில் ஜெயச்சந்திரன் பெரிய ஜம்பவானாக போற்றப்பட்டார்.

பி. ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரவிபுரத்தில் பிறந்தார். பின்னர் இரிஞ்சாலக்குடாவிற்கு குடிபெயர்ந்தார். ஜெயச்சந்திரன் பின்னணிப் பாடகர் ஆவதற்கு அவரது அண்ணன் சுதாகரன் ஊக்கப்படுத்தினார்.

புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாகரன். 1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலயுமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் அறிமுகமானார்.

பிறகு அவரது பயணம் ஜி.தேவராஜன், வி.தட்சிணாமூர்த்தி, கே.ராகவன், எம்.எஸ்.பாபுராஜ், எம்.கே.அர்ஜுனன் போன்ற பெரிய மாஸ்டர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனாலும் அவர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் அனைவருக்கும் மேலானவர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

1973ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில்

பொன்னென்னே பூவன்னெ கண்ணே
உன் கண்ணாடி உள்ளதின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது கண்ணே..

என்ற பாடலைப் பாடியதன் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த ‘பெண்படா’ என்ற மலையாளத் திரைப்படத்தில்

‘வெள்ளி தேன் கிண்ணம் போல்..
வெண்ணக்கல் சில்பம் போல்
துல்லியறிகத்துவந்த பெண்ணே
‘என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இதுதான் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடல் என்று கருதப்படுகிறது.

இவர் பல பதினாறாயிரம் பாடல்கள் பாடியிருந்தாலும் அவருக்கு பெரிய அடையாளத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது இளையராஜா இசையில் வெளிவந்த ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்ற வைதேகி காத்திருந்தாள் படத்தின் பாடல்தான் அவருக்கு பெரும் புகழைக் கொடுத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியபோது ஜெயச்சந்திரனை ரசிகர்களுக்கு இவர்தான் ராசாத்தி உன்ன ஜெயச்சந்திரன் என்று அறிமுகம் செய்தபோது மொத்த அரங்க மொத்தமும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தது. இதை தன்னுடைய வாழ்நாளில் பார்த்திராத ஒரு பாராட்டு என்று நெகிழ்ந்துபோய் பேசியிருக்கிறார்.

இந்த பாடலின் ஒரு சிறப்பை பற்றி பேசிய ஜெயச்சந்திரன் இந்தப் பாடம் ஓடிய தியேட்டர் ஒன்றின் அருகில் குறிப்பிட்ட இந்தப்பாடல் ஒலிக்கும்போது அதன் இசையில் மயங்கி வனத்தின் அருகிலிருந்து யானைகள் கூட்டம் வந்து செல்லும் அதிசயம் நடந்திருப்பதாக சொல்லப்பட்டதை பெருமையாகக் குறிப்பிட்டார்.

இதைவிட, முதலில் இந்தப் பாடலுக்கு கவிஞர் வாலி முதலில் எழுதிய வரிகள், பூப்போட்ட சேலை ராக்கால வேள புதுராகம்தான் பாடுது..இதை இயக்குனர் சுந்தர்ராஜன் இதைவிட வேற ஒரு வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, எனக்கு நேரம் இல்லையா என்று வாலி தயங்க, பக்கத்தில் இருந்த சுந்தர்ராஜன் உதவி இயக்குனர் பாலு ஆனந்த் இந்த வரிகளை எழுதிக்கொடுத்திருக்கிறார். அதை வாலியிடம் காட்டி, இது போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று காட்டி, வாலி அவர்கள் இது மாதிரி என்ன.. இதையே வெச்சுக்கய்யா என்று பெருந்தனையாகச் சொல்லியிருக்கிறார்.

இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் படித்த காலத்தில் எம்.எஸ்.வி. குழுவில் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடலை கம்போஸ் செய்ய எம்.எஸ்.வி. பாடகர் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு போயிருந்தார். அங்கு கிடார் வாசிக்க இளையராஜா ஜெயச்சந்திரன் வீட்டுக்குப் போயிருந்தார். காலம் மாறிய பிறகு இளையராஜாவின் அபார வளர்ச்சி அவரை வியக்க வைத்திருக்கிறது.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சுபாவமுடையவர். ஒருமுறை மலையாளத்தில் இருக்கும் ரவீந்திரன் மாஸ்டரைப் பற்றி கேட்டபோது, நான் அவரை ஒரு தலைசிறந்த இசையமைப்பாளராகக் கருதவில்லை. அவரது இசையமைப்புகள் தேவையில்லாமல் சிக்கலானவை. இசையை ஏன் சிக்கலாக்க வேண்டும்? என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். நான் எப்பொழுதும் என் மனதில் பட்டதை பேசுவேன். நான் ஏன் கூடாது? நான் குறுகிய மனப்பான்மை கொண்டவன் என்று மக்கள் கூறுகிறார்கள். குற்றச்சாட்டை ஏற்கிறேன்.
முகமது ரஃபிதான். ரஃபி சாப் என் கடவுள். என்னுடன் ரஃபி சாருக்கு பிடித்த டை உள்ளது; அவர் பத்மஸ்ரீ விருது பெறும் போது அணிந்திருந்தார். இது எனது மதிப்புமிக்க கையகப்படுத்துதல்களில் ஒன்றாகும். பெண் பாடகர்களில் பி சுசீலாவை சிறந்தவராக நான் கருதுகிறேன் என்றார்.

எம்.எஸ்.வி., இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி. பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது.

காற்று ,உள்ளவரைக்கும் அவரது கானம் காற்றினில் கலந்து இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...