No menu items!

ராதிகாவுக்காக படம் இயக்குவேன் – சரத்குமார்

ராதிகாவுக்காக படம் இயக்குவேன் – சரத்குமார்

கண் சிமிட்டும் நேரம் (1988) படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் சரத்குமார். அவரின் 150-வது படமான ஸ்மைல் மேன் 27-ம் தேதி வெளியாகிறது.

ஸ்மைல் மேன் படம் குறித்தும், சினிமா அனுபவங்கள் குறித்தும் சென்னையில் சரத்குமார் பேசியதாவது:

ஸ்மைல் மேன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். ஷ்யாம் – பிரவீன் என்ற இருவர் இயக்குகிறார்கள். இனியா, சிஜா ரோஸ் உட்பட பலர் நடிக்கிறார்கள். படம் பார்த்த எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர்கள் அதை விட வித்தியாசமாக எடுத்துள்ளனர்.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். என்ன நடக்கிறது என்பது கதை. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், படம் நகர்கிறது.

இதுவரை 150 படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறேன். சிறந்த நடிகையான என் மனைவி ராதிகவுக்கு ஏனோ இன்னமும் தேசிய விருது கிடைக்கவில்லை.அவருக்கு தேசிய விருது கிடைக்கும் வகையில் அவருக்காக ஒரு படம் இயக்க உள்ளேன். ராதிகாவுக்கு தேசியவிருது கிடைக்காததற்கு அரசியலா என தெரியவில்லை . என் மகன் ராகுல் நடிப்பானா என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்

என்னுடைய 100 படமான தலைமகன் விழா பெரிதாக நட ந்தது. 150 பட விழா எளிமையாக நடக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டரில் நடிக்க அழைத்தார்கள். அப்போதைய சூழ்நிலையில் நடிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருடன், நான் நடிப்பது மாதிரியான ஒரு கதை என் மனதில் இருக்கிறது. நவீன டெக்னலாஜியில் எம் ஜி ஆரை கொண்டு வர இருக்கிறோம்.விரைவில் அந்த படம் உருவாகும். நான் அரசியல், சினிமா என இரண்டிலும் ஜாலியாக இருக்கிறேன். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும் போது சிலர் கூத்தாடிகள் என விமர்சனம் செய்கிறார்கள். அதே சமயம் தேவைப்படும் போது அவர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...