இந்தியில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், பாலிவுட்டில் ஜெயிக்க வேண்டும் என்பது பல ஹீரோயி்ன்களின் கனவு. தென்னிந்தியாவில் கொடி கட்டிப் பறந்த, பறக்கும் ஹீரோயின்களுக்கு கூட இந்த ஆசை உண்டு. சமீபகாலத்தில் திரிஷா உட்பட பலர் இந்தியில் நடித்தார்கள். ஆனால், பலருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
சமீபத்தில் தென்னிந்திய ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் என்ற இந்தி படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடிக்க முயற்சிக்கிறார் ராஷ்மிகா. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் பெரிய வெற்றி பெற்றாலும், அதில் நயன்தாராவுக்கு பெயர் கிடைக்கவில்லை. நயன்தாராவை பாலிவுட்டில் கொண்டாடவில்லை. அதனால், அவர் அங்கே ஜொலிக்க முடியாமல் சென்னை திரும்பிவிட்டார். அங்கே கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள். 2 குழந்தைகளுக்கு அம்மா ஆனபின், 40 வயதை தொட்டபின் அது செட்டாகாது என்று நயன்தாரா நினைக்கிறாராம்
இப்போது கீர்த்திசு ரேஷ் முறை. தமிழில் வெற்றி பெற்ற தெறி படம் அங்கே பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அட்லி தயாரிக்க, அவர் உதவியாளர் காளீஸ் இயக்கியிருக்கிறார். டிசம்பர் 25ல் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் விஜய் வேடத்தில் வருண்தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். திருமண முடிந்தகையுடன் அந்த பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
15 ஆண்டு காதல் கைக்கூடி, திருமணம் ஆகியுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது கணவருடன் வெளிநாட்டில் குடியேறுவாரா? பேபி ஜான் பாணியில் இந்தியில் கவர்ச்சியாக நடிப்பாரா என்ற கேள்விகளுக்கு விடையில்லை.