வாத்தியார் பெருமாளை கைது செய்து அழைத்து வரும் வழியில் பெருமாள் தன்னை ப்ற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். காட்டுக்குள் தான் வாழ்ந்த வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது. கம்யூனிஷ சித்தாந்தம் எப்படி தனக்கு அறிமுகம் ஆனது என்பது பற்றி அவர் சொல்லத் தொடங்குகிறார். தோழர் கே.கே. அறிமுகம். அங்கு கிடைக்கும் தோழர் மஞ்சுவாரியர் நட்பு , கொள்கை தாண்டி உருவாகும் காதல், ஆண்டைகளை எதிர்க்கும் இளைஞர் கருப்பு, பண்ணையார்களின் அட்டகாசம், அதை எதிர்க்கும் வாத்தியார் பெருமாள் வாழ்க்கை என்று பிரமாண்டமாக கதை விரிகிறது.
தலைமைச் செயலாளாலர் ராஜீவ் மேனன் பெருமாளை கைது கணக்கில் காட்டாமல் வைத்து செய்ய நினைக்கும் சட்ட மீறல், அதையும் தாண்டி அவருக்கு மேலிடத்தில் இருக்கும் அழுத்தம், மந்திரி இளவரசுவின் ஈகோ, பெருமாள் கைது குழுவில் இருக்கும் அதிகாரி சேத்தனின் தகிடுதத்தங்களுக்கு பலியாகும் போலீஸ் காவலர்கள் என்று படம் வேகமெடுக்கிறது. அரசு இயந்த்கிரத்திற்கும் அதைத்தொடர்ந்து நடக்கும் வழக்கமான அதிகார போட்டிக்கும் நடக்கும் ஈகோ யுத்தமாக இரண்டாம் பாதி நகர்கிறது.
விஜய் சேதுபதிக்கு இது ஒரு வித்தியாசமான முக்கியமான படமாக இருக்கிறது. அதை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி மனதைத்தொடுகிறது. முதல் பாகத்தில் சூரியின் மூலம் அதிகாரிகளின் ஆட்டத்தை காண்பித்த இயக்குனர் வெற்றி மாறன் இந்தப்படத்தில் மொத்த அரசு நிர்வாகம் இது போன்ற இக்கட்டான நேரத்தில் அரசும், அதிகாரிகளும் எப்படி இருப்பார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல காட்டியிருக்கிறார். குறிப்பாக ராஜீவ் மேனன் நடிப்பு படத்தின் சீரியஸ் தன்மையை காட்டியிருக்கிறது. அடுத்து சேத்தன் சேத்தன் காவல் அதிகாரியாக இருந்தும், அவர் செய்யும் வில்லத்தனம் சக போலீஸ் காட்டும் நட்பு என்று படத்தை இரண்டாம் பகுதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
அடுத்து வரும் இயக்குனர் தமிழ் தேடுதல் வேட்டையில் நடந்து கொள்ளும் விதமும் அதற்கு சூரியின் மன நிலையும் வாத்தியார் சேதுபதி பேச்சு கேட்டு காவலர்களே சித்தாந்தவாதிகளாக மாற நினைக்கும் இடம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மஞ்சுவாரியர், கிஷோரின் பாத்திரம் மனதில் நிற்கிறது. பண்ணையார்களால் பாதிக்கப்படும் இளைஞராக கென் கருணாஸ் காட்சிகள் அதிர வைக்கிறது. முழு படத்தையும் பார்த்து பார்த்து இழைத்திருக்கிறது இளையராஜாவின் இசை. காட்களைன் உள்ளடகத்தையும் உணர்வுகளையும் இசை மூலம் கடத்துகிறார் ஞானி.
படக்குவினர் மொத்தமும் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. வணிக சினிமாவுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் முழு படத்தையும் சலிக்காமல் பார்க்க வைக்கிறது வெற்றிமாறனின் திரைக்கதை.
தமிழக அரசியலில் நடந்த முக்கியமான போராட்டக் குழுவும், அதன் பின்னணியையும் வெகுஜனங்கள் ரசிக்கும் வகையில் திரைப்படமாக எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டக்கூடிய ஒன்று.
பனி மூட்டத்திற்கு இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டையை பதிவு செய்திருக்கும் இடம் வியக்கும்படி இருக்கிறது.