பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான சத்யா வெளியேறினார். ஆனால் இவர் பிக்பாஸ் aச்வீட்டில் மிகவும் சேப் கேம் விளையாடியதாகவே பார்க்கப்பட்டது. முதல் நாளே சத்யா வெளியேறிய நிலையில், ஞாயிற்று கிழமை அன்று விஷால் மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவது கன்ஃபாம் ஆன நிலையில், பிக்பாஸ் ஹவுஸ் மேட்சே தர்ஷிகா கடந்த சில வாரங்களாக காணாமல் போய் விட்டார் அவர் எங்கே என்று தேடும் நிலை தான் இருந்தது. எனவே அவர் தான் வெளியேற உள்ளதாக தெரிவித்தனர். இறுதியாக தர்ஷிகா வெளியே அனுப்பட்ட நிலையில், விஷால் நூல் இழையில் தப்பினார்.
தற்போது வீட்டிற்குள் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலின், ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், , மஞ்சரி நாராயணன், , சௌந்தரியா நஞ்சுதன், ஜெஃப்ரி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் முன்னாள் டைட்டில் வின்னர் அர்ச்சனா தனது காதலர் அருணுக்கு ஆதரவு தெரிவித்து, விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். தனது கருத்தை வீடியோவாக பேசி வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், “ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம் தான். ஆட்கள் குறைந்துவிட்டதால் சமையல் வேலைக்கு ஆட்கள் குறைக்கலாம் என சொன்னார் அருண். மற்ற வேலைகளை செய்ய ஆட்கள் வேண்டும் என்பதால் அவர் அப்படி சொன்னார். லேபர் வேலை, Skill வேலை என பிரித்து பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் எல்லோரும் சமம் தான். கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது, வேலை செய்வது அல்ல என்பதை தான் அருண் கூறினார்.
லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் ஊதி பெரிதாக்கிவிட்டார்கள். தொகுப்பாளர் விஜய் சேதுபதி உட்பட இதை செய்தார்கள்” என அர்ச்சனா அந்த வீடியோவில் குற்றம் சாட்டி பேசி இருக்கிறார்.
அருண் பயந்துவிட்டார். அவரால் தனது தரப்பு வாதத்தை சரியாக எடுத்து வைக்க முடியவில்லை. இதை ஏன் இவ்வளவு பெரிதாக்கினார்கள் என புரியவில்லை. ஷோ முடிந்தபிறகு மைக்கில் பேசியது, கன்பெக்ஷன் ரூமில் பேசியது எல்லாம் Damage Control மாதிரி தெரிந்தது. அதற்கு பேசாமேலேயே விட்டிருக்கலாமே. இதை ஏன் 40 நிமிஷம் பேசிட்டு இருந்தீங்க” என பேசி இருக்கிறார் அர்ச்சனா. , “குடும்பப் பொறுப்புகள் ‘திறன்’ அல்லது ‘உழைப்பு’ பற்றியது அல்ல – இது குழுப்பணி மற்றும் நேர்மை பற்றியது. மரியாதைக்குரிய தொகுப்பாளர் தர்க்கரீதியான கண்ணோட்டத்தை அது இல்லாததாக மாற்ற வேண்டாம். அருண் சமத்துவத்துடன் நின்றார், அது விவாதிக்க வேண்டிய நிலைப்பாடு. வீடியோவைப் பார்த்து, உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்-நியாயமா அல்லது படிநிலையா?” என பதிவிட்டுள்ளார்.