தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லியின் வளர்ச்சியை அசுர வளர்ச்சி என்பார்கள். காரணம், 2013ம் ஆண்டு ராஜாராணி படத்தில் அறிமுகம் ஆனவர், தெறி, மெர்சல், பிகில், ஜவான் என 5 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இதில் ஜவான் இந்தி படம். ஆனாலும், இந்தியளவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக அட்லி மாறியுள்ளார். காரணம், அவர் கொடுத்த வெற்றி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய 5 படங்களும் சூப்பர் ஹிட். இதில் ஜவான் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது.
ஜவான் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இன்னமும் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்லி வெளியிடவில்லை. இந்தியில் சல்மான்கானை வைத்து படம் இயக்கப்போகிறார், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் படம் பண்ணப்போகிறார். கேஜிஎப் யஷ் படத்தை இயக்க ரெடியாகிறார் என செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், அல்லுஅர்ஜூனுடன் கை கோர்க்கப்போகிறார் அட்லி. புஷ்பா2 படத்தை வெற்றியை தொடர்ந்து இந்தவெற்றி கூட்டணி இணையப்போகிறது என்று கூறப்படுகிறது. புஷ்பா2 படமும் ஆயிரம் கோடி வசூலை தாண்டிவிட்டது, அட்லியும் ஆயிரம் கோடி வசூல் கொடுத்த இயக்குனர். அதனால், இந்த கூட்டணி இணையப்போகிறது. அல்லுஅர்ஜூன் தந்தையான அல்லு அரவிந்த்தின் கீதா ஆர்ட்ஸ், அட்லி கம்பெனி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என்று தெலுங்கு மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் பட வேலைகள் காரணமாக குடும்பத்துடன் மும்பையில் தங்கியுள்ள அட்லி, அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் செட்டில் ஆவார் என்றும் கேள்வி