2024-ம் ஆண்டில் கூகுள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பிஹார் முதல்வரான நிதிஷ் குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த விராட் கோலியின் பெயர் இந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்…
1.வினேஷ் போகட்
2.நிதிஷ் குமார்
3.சிராக் பாஸ்வான்
4.ஹர்த்திக் பாண்டியா
5.பவன் கல்யாண்
6.சஷாங்க் சிங்
7.பூனம் பாண்டே
8.ராதிகா மெர்சண்ட்
9.அபிஷேக் பச்சன்
10.லக்ஷயா சென்
அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்
2024-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முதல் இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகளே இதில் அதிக இடங்களைப் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சிகளின் பட்டியல்…
1.ஐபிஎல்
2.டி20 உலகக் கோப்பை
3.பாரதிய ஜனதா கட்சி
4.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
5.ஒலிம்பிக்ஸ்
6.அதிகப்படியான வெப்ப நிலை
7.ரத்தன் டாடா
8.இந்திய தேசிய காங்கிரஸ்
9.ப்ரோ கபடி லீக்
10.இந்தியன் சூப்பர் லீக்
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள்
2024-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளின் பட்டியலிலும் ஐபிஎல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த விளையாட்டு நிகழ்ச்சிகள்…
1.ஐபிஎல்
2.டி20 உலகக் கோப்பை
3.பாரிஸ் ஒலிம்பிக்
4.ப்ரோ கபடி லீக்
5.இந்தியன் சூப்பர் லீக்
6.பெண்கள் ப்ரீமியர் லீக்
7.கோபா அமெரிக்கா
8.துலீப் ட்ராபி
9.ஐரோப்பிய கால்பந்து போட்டி
10.19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்
2024-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து கோட் திரைப்படம் மட்டுமே டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அப்படம் 8-வது இட்த்தைப் பிடித்துள்ளது.
டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்களின் பட்டியல்…
1.ஸ்த்ரீ 2
2.அல்கி 2898
3.12த் பெயில்
4.லால்பட்டா லேடீஸ்
5.ஹனு-மான்
6.மகாராஜா
7.மஞ்சுமல் பாய்ஸ்
8.கோட்
9.சாலார்
10.ஆவேசம்