No menu items!

அல்லு அர்ஜுன் திரைபடம் வசூலும் வருத்தமும்

அல்லு அர்ஜுன் திரைபடம் வசூலும் வருத்தமும்

புஷ்பா 2 படம் வெளியாகி பரபரப்பை எற்பத்தியிருக்கிறது. ஆந்திராவில் புஷ்பா 2 வெளியான திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஆந்திரா முழுவதும் எதிரொலித்து படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதோடு நடிகர் அல்லு அர்ஜுன், அவருடன் பணிபுரிபவர்கள், சந்தியா திரையரங்க உரிமையாளர் என பலர் மீது ஆந்திரா சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு குழந்தை உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய மண்டல டிசிபி அகன்ஷ் யாதவ், உயிரிழந்தோர் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் 105, 118(1) r/w 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்வின் போது தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவரால் மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது 8 வயது மகனும் இந்த கூட்டத்தில் சிக்கி பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் பிரீமியரை பார்க்க சந்தியா திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அவரை பார்க்க பலரும் முந்தியடித்து கொண்டு அருகே சென்றதால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ரேவதியும், அவரது மகனும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இனி ஆந்திராவில் பிரீமியர் காட்சிகள் நடந்த அனுமதி கிடையாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படம், ப்ரீ-புக்கிங்கிலேயே இந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது. இதில் மட்டும், இப்படம் சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்திய அளவில் இப்படம் சுமார் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவை தாண்டி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இதனால், உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.265 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய படங்கள் பல, இதுவரை பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவற்றுல் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள், ஜவான், தங்கல், RRR உள்ளிட்ட படங்களும் அடங்கும். ப்ரீ-புக்கிங்கில் இந்த படங்களின் சாதனையை புஷ்பா 2 படம் முறியடித்திருக்கிறது. இதனால், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம், புஷ்பா 2 படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...