No menu items!

புஷ்பா 2 – ஃபயரா? தண்ணியா – social media விமர்சனம்

புஷ்பா 2 – ஃபயரா? தண்ணியா – social media விமர்சனம்

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் தொடர்பாக சமூக வலைதலங்களில் சிலர் வெளியிட்டுள்ள விமர்சனம்

சி.பி.செந்தில்குமார்

புஷ்பா 2 (தெலுங்கு /தமிழ் ) – இந்தியன் 2 , தங்கலான் , கங்குவா வரிசையில் இதுவும் ஒரு குப்பைப்படம் தான் . 800 ரூபாய் டிக்கெட் ரேட் ஓவரோ ஓவர் .திரைக்கதை எழுத டைம் இல்லை போல .கே ஜி எப் 2 + காந்தாரா அட்லி ஒர்க் .குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம் , மட்டமான ரசனை . ரேட்டிங் 1.5 / 5

அஸ்வின் சென்னை

தெரியாத்தனமா காலைல 11மணி காட்சிக்கு புஷ்பா2 புக் பன்னிட்டேன். அப்புறம் தான் பாக்குறேன் மூவி ரன்னிங் டைம் 3மணி 20நிமிடங்கள்.
இவ்ளோ நேரம் தியேட்டர்ல எப்புட்ரா உக்கார முடியும். முன்னாடியே கவனிச்சிருந்தா புக் பன்னிருக்க மாட்டேன்.

புஷ்பா-1 வேற நான் பாத்ததில்லை. அது பாக்காம இது புரியுமான்னு வேற தெரில. பாத்துட்டு சொல்றேன்.

Surez@imsurez

Part 1ல பஹத் கேரக்டர தூக்கிட்டு ஒரு வில்லன கொண்டுவந்து, புஷ்பா தங்கச்சி தூக்கிட்டு போயிருந்தா அப்பவே புஷ்பா காப்பத்திருப்பார் படம் அப்பவே முடிஞ்சியுருக்கும், part 2 noting interesting for me. கதையே இல்லாம இலுவைய போட்டானுங்க இதுல பார்ட் 3 வேற.

டி.வி.சோமு

மூளை இல்லாதவர்களுக்காக இதயம் இல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட படம்
புஷ்பா 2

Arulkumar Karuppannan @ArulkumarBjp

நெற்றியில் குங்குமம் வைத்து நடித்தால் அல்லது ஹிந்து வாழ்வியலை மேற்கொண்டு நடிக்க தயங்கும் தமிழ் தொடை நடுங்கி நடிகர்களுக்கு மத்தியில் ஒரு ஆண் மகன் புஷ்பா 2 இது மாதிரி ஒரு வணிக பொழுதுபோக்கு படங்களின் வெற்றி மூலம் இனி நல்ல தமிழ் படங்கள் வரும் என்று நம்புவோம்

சினிமாக்குத்தூசி @mayirepochu1

புஷ்பா-1 க்கும் புஷ்பா- 3 க்கும் இடையில் புஷ்பா-2 க்கு ஒரு கதையை பிடிக்க வேண்டுமென்று பிடித்த கதை போல.இந்த மிக சாதாரண குப்பயை பல நூறு கோடிகளில் அலங்கரித்து கதையாக கொட்டியிருக்கிறார்கள். இதற்கு இழு இழு என்று உடற்சோர்வு உளச்சோர்வு என்று அலுப்பூட்டும் இழுவை தேவையில்லைதான்.

フ卂丨ㄥ乇尺 @batsha1999

3 மணி ஆச்சு தமிழ் youtube சேனல் ஒன்னு கூட புஷ்பா 2 review போடல so called geniune reviewers filmycraft, trollywood,prasanth,….. Etc மீண்டும் ஒரு முறை சொல்றேன் இவங்கள மாதிரி ஆளுங்க தான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...