அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்
இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
நாயகன் மிர்ச்சி சிவா பேசும் போது, சி.வி.குமாரும் அர்ஜுனும் வந்து சூது கவ்வும் 2 பண்ணலாம்ன்னு சொன்னபோது, ‘இது நல்ல படம் சார், நாம பண்ணி சொதப்ப வேண்டாம்’னு சொன்னேன். அவங்க இது நலனே (முதல் பாக இயக்குநர் நலன் குமாரசாமி) சொன்ன ஒரு லைன்னு சொன்னாங்க. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சிது நலனுக்கு பார்ட் ஒன்னே மறந்துட்டு அப்படின்னு. இப்படி தான் என்னை ஏமாத்திட்டாங்க பிரதர் (நலன்.இந்த படம் நலன் இல்லாமல் பண்ணலாம், விஜய் சேதுபதி இல்லாம பண்ணலாம், ஆனா அருமை பிரகாசம் இல்லாமல் பண்ண முடியாது சொன்னாங்க. அமைதியா இருந்துட்டே எல்லா சேட்டையும் செய்ற கேரக்டர், ரியல் லைஃப்யும் கருணாகரன் அப்படித்தான்
சி.வி.குமார் நம் இண்டஸ்ட்ரிக்கு ஒரு சொத்து. பல திறமையாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் பெரிய யூனிவர்சிட்டின்னு சொல்லுவாங்க. யூனிவர்சிட்டின்னா கொஞ்சம் டேமேஜாதான் இருக்கும். வசதிகள் குறைவாகத்தான் இருக்கும். முதலில் இங்க வந்து படிக்கணுமான்னு தோனும். ஆனால் மாணவர்கள் நல்ல அறிவோடு வெளியே சொல்வார்கள். அப்படிப்பட்ட பல்கலைக்கழகம் அவர்.