No menu items!

ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா!

ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்த ஜெய் ஷா, இப்போது சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் கிரிக்கெட்டில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

தனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று அந்த பதவியை ஏற்றார்.

ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

ஐசிசி தலைவராக பதவி ஏற்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர் நாடுகள் மற்றும் மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது கிரிக்கெட் வரும் 2028 ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற இருக்கிறது. இது கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல காலம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கிரிக்கெட்டை கொண்டு செல்ல முயற்சி செய்வேன். அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் விளையாட்டை உருவாக்குவதே எனது லட்சியம். தற்போது பலவிதமான கிரிக்கெட் போட்டிகள் ஒரே சமயத்தில் நடைபெறுகிறது. அது மட்டுமில்லாமல் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும்.

கிரிக்கெட் உலக அளவில் பெரும் வளர்ச்சியை நோக்கி செல்லும் திறன் இருக்கிறது. ஐசிசி குழு மற்றும் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கின்றேன். கிரிக்கெட்டை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்ல நான் முயற்சி செய்வேன்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக சிறப்பாக செயல்பட்ட கிரேக் பார்க்லேவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருடைய காலத்தில் பல மைல்களை ஐசிசி எட்டியிருக்கிறது. மற்ற உறுப்பினர்கள் நாட்டுக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதை என்னுடைய முதல் பணியாக இருக்கும்.

இவ்வாறு ஜெய்ஷா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...