No menu items!

கீர்த்தி சுரேஷ் திருமணம் காதலருக்காக மதம் மாறுகிறாரா?

கீர்த்தி சுரேஷ் திருமணம் காதலருக்காக மதம் மாறுகிறாரா?

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் அதுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர். தானும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று அறிவிப்பு வெளியிட்டார் கீர்த்தி.

தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பை அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்து திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாவது இது முதல் முறையல்லை. ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளபோவதாக வதந்திகள் வெளியாகின.

அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரமற்ற இதற்கு மறுப்பு தெரிவித்ததனர். அத்துடன் அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் கூறினர்.

இதற்கிடையே வரும் டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழன் ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருக்கிறார்.

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் ஆண்டனிக்கு சொந்த ஊரான கொச்சியில் அவருக்கு சொந்தமான ரிசார்ட்ஸ் உள்ளது. இந்த இளம் ஜோடி திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்டனி ஹபீப் ஃபீரூக் என்பவருடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக இருக்கிறார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துக்களுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரது திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி, கிறிஸ்தவ பாரம்பரியத்தை பின்பற்றி நடைபெற உள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்து பின்னணியில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆனால் திருமணத்துக்காக அவர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவாரா அல்லது கேரளாவில் இந்து மதத்தின்படி திருமண விழாவையும் நடத்துவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளனஆனால் கோவாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ சடங்குகளின்படி திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...