No menu items!

சிஎஸ்கேவில் தோனியுடன்! – அஸ்வின் மகிழ்ச்சி

சிஎஸ்கேவில் தோனியுடன்! – அஸ்வின் மகிழ்ச்சி

தோனியுடன் ஆடும் நாளுக்காக தான் காத்திருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபில் போட்டிக்கான வீர்ர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் ஜெத்தா நகரில் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய் கொடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியுள்ளது. அஸ்வினுடன் நியூஸிலாந்து வீரர்கள் டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஆப்கானிஸ்தான் வீரர் நூர் முகமது, பேட்ஸ்மேன் திரிபாடி, வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் இல்லை என்ற குறையை தீர்க்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் வாங்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் யூடியூப் சேனலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். நான் 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினேன். இப்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளேன். சிஎஸ்கேவில் கற்ற விஷயங்கள்தான் நான் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைக்க உதவியது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நான் பல்வேறு அணிகளுக்காக சென்னையில் வந்து விளையாடிய போது, சிஎஸ்கேவுக்காக ஆடவில்லையே என்று மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அந்த சமயத்தில் நான் பந்து வீசும் போதும், பேட்டிங் செய்யும்போதும் சிஎஸ்கே ரசிகர்கள் எனக்கு ஆதரவாக கோஷமிட மாட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் நான் Anbuden என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

தற்போது அந்த ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். நான் திரும்ப சிஎஸ்கே அணிக்கு வருகிறேன்.சென்னையில் வந்து விளையாடுகிறேன் என்பதை விட என் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம் நடந்தது. 2011 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி என்னை வாங்க ஏலத்தில் கடுமையாக போட்டி போட்டார்கள்.

தற்போது அதேபோல் என்னை மீண்டும் ஏலத்தில் போட்டி போட்டு சிஎஸ்கே எடுத்து இருக்கிறார்கள். தோனி உடனும் கேப்டன் ருதுராஜ் தலைமையிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் நாளை நினைத்து நான் எதிர்கொண்டு காத்திருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி.

இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பந்த்

முன்னதாக நேற்று நடந்த ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பந்த்தை லக்னோ அணி வாங்கியுள்ளது. அவருக்கு அடுத்து 26.75 கோடி ரூபாய் கொடுத்து ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...