No menu items!

ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்  

ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்  

அபிராமி தனது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.  அந்த ஊர் எம்.எல்.ஏ வான மதுசூதனன் மூலம் அவர்களுக்கு  ஒரு பிரச்சனை வருகிறது.  அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார். பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது பெண்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவா பிணமாக இருக்கிறார்.

பிரபு தேவாவை கடைசியாக பார்த்தவர்கள் என்பதால் கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடும் என்பதால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் நான்கு பெண்களுக்கு தெரிய வருகிறது. தங்களது பிரச்சனைகளை சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை உயிருடன் இருப்பது போல் காண்பித்து அந்த 10 கோடி ரூபாயை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இந்த பணத்தை அவர்கள்  எடுத்தார்களா ? பிரபு தேவாவை என்ன செய்தார்கள் என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

பிரபு தேவா என்றாலே ஆட்டம் பாட்டுமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போனால் ஏமாந்து போவீர்கள். படம் முழுவதும் உயிரற்ற உடலாக நடித்து கைதைட்டல் பெற்றிருக்கிறார் பிரபு தேவா. பாடல்களில் ஆடும் போது சின்னச்சின்ன சேட்டைகள் மூலம் சிரிப்பு மூட்டும் பிரபு அதே பாணியில் அமைதியான மேனரிசத்தில் சிரிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஆடும் நடனம் சூப்பர்.

மடோனா செபாஸ்டியன், அபிராமி ஆகியோருடன் மேலும் மூன்று பெண்கள் படம் முழுவதும் பயணித்தாலும், பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முதல் முறையாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் ஆகியோர் போதாது என்று இயக்குநர் சக்தி சிதம்பரமும் நடித்திருக்கிறார்.

அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சக்தி சிதம்பரம், பழையபாணி கதையை எடுத்திருந்தாலும்  காமெடிக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை ரசிக்க வைக்கிறார்.

ஜாலியோ ஜிம்கானா – சிரிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...