தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரன் அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயக்குமார் விழா மலரை பெற்றுக் கொண்டார்,
கடம்பூர் ராஜூ அவர்கள் அழைப்பிதழ் வந்து என் வீட்டில் வந்து கொடுத்திருந்தாங்க. நான் வந்து வீடியோ மூலமாக உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஜானகி அம்மாளும் எம்.ஜி.ஆர். அவர்களும் சேர்ந்து நடித்த முதல் படம், மருதநாட்டு இளவரசி என நினைக்கிறேன்.
அப்போது அவங்க மிகப்பெரிய நட்சத்திரம். எம்.ஜி.ஆர் சாருக்கு இரண்டாவது படமோ, மூன்றாவது படமோ, அப்பதான் ஹீரோவாக நடிச்சிட்டு வர்றாரு. அப்பவே வந்து எம்.ஜி.ஆர் சாரை பத்தி, இவர் மிகப்பெரிய நடிகர் ஆவார் அப்படினு கணிச்சு, உச்சத்தில் இருந்த தனது திரைவாழ்வை தியாகம் பண்ணி, அவரைக் காதலிச்சி மணந்தார்.
கடைசி வரைக்கும் எம்.ஜி.ஆரை சந்தோஷமாக பாதுகாப்பாகப் பார்த்துக்கிட்டாங்க. நிறையபேருக்கு தெரியும் எம்.ஜி.ஆர் சாருடைய ராமாவரம் தோட்டத்தில் எப்போது போனாலும் சாப்பாடு கிடைக்கும்ன்னு. இருநூறு, முந்நூறு பேர் சர்வசாதாரணமாக சாப்பிடுவாங்க. சாம்பார் சாதம், தயிர் சாதம், அந்த மாதிரி கிடையாது. நல்ல ஒரு கல்யாணச் சாப்பாடு மாதிரி. வெஜிடேரியன், நான் வெஜிடரியேன் என எப்போதுமே கிடைக்கும். அது வி.என்.ஜானகியம்மா மேற்பார்வையில் தான் நடக்கும்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மறைந்த பிறகு, அப்போது சூழல் ஜானகியை அரசியலுக்கு கொண்டு வந்தது. ஆனால் ஜானகிக்கு அரசியலில் துளியும் ஈடுபாடு இல்லை. அப்போதைய சூழல் அவரை அரசியலுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து ஜானகி முதல்வர் ஆனார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலைமைச்சர் ஆனார் ஜானகி. அடுத்ததாக தேர்தலை சந்திக்கும்போது அது இரண்டு அணியாக பிரிந்தது. இரட்டை இலை என்னும் பிரம்மாஸ்திரம் அப்போது முடக்கப்பட்டது. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அந்த சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தில் நின்று போட்டியிட்டு மீண்டும் ஜானகி “தோல்வியடைந்தார். அப்போது அவங்க நிறைய சவால்களை சந்தித்தாங்க..
நான் அரசியலுக்கு வரேன் என்று சொன்னதும் நிறைய பேர் ஆலோசனை சொன்னாங்க.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாக நம்மிடம் சொன்னாங்க.. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டால் அவ்ளோ தான்.. ஆளுக்கொரு கருத்தை சொன்னாங்க.. அவங்க சொல்றத எல்லாம் கேட்டால், நம்மளோட நிம்மதி, பணம் என எல்லாத்தையும் இழந்திட வேண்டியது தான்.. அது தெரிந்து சொல்கிறார்களா.. இல்லை தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியாது.. ஒருசிலர் மட்டும் தான் நாம் எடுக்க போகிற முடிவால் மத்தவங்களும் சந்தோஷமாக இருக்கனும் என்று நினைப்பாங்க.. ஒருவர் மட்டும் சந்தோஷம் அடைகிறார்களா அல்லது நிறைய பேர் சந்தோஷம் அடைகிறார்களா.. ஒருவருக்கும் மட்டும் நல்லதா.. இல்ல அந்த முடிவால் நிறைய பேர் பயன் அடைகிறார்களா என்று தான் பார்ப்பார்கள்.