No menu items!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி, ஜார்க்கண்டில் ஜேஎம்எம் வெற்றி

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி, ஜார்க்கண்டில் ஜேஎம்எம் வெற்றி

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் தற்போதைய நிலவரபட்டி 288 தொகுதிகளில் 225-ல் மகாயுதி கூட்டணியும், 55-ல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 51 இடங்களிலும், பாஜக கூட்டணி 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்கள் (மகாயுதி) என்ன செய்தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ பெறாதது எப்படி? தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேலும் பேசுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” என தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பிரவின் தரேகர், “சஞ்சய் ராவத் தனது விமானத்தை தரையிறக்க வேண்டும். மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி இருக்கும்போது மகாராஷ்டிரா மேலும் முன்னேறும். பொதுமக்களின் முடிவுக்கு இதுவே காரணம். மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவார் என நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் பிரியங்கா வெற்றி

இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். இதனால் வயநாடு தொகுதியில் இமாலய வெற்றியை பிரியங்கா உறுதி செய்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்த மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி சாத்தியமாக்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...