சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை எதிர்த்து, அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார். “நீங்களே கங்குவா திரைப்படம் முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் டிக்கெட் வாங்கி விட்டு அனைவரும் 30 நிமிடங்கள் கழித்து தான் திரைப்படம் பார்க்க செல்ல வேண்டுமா?. ஒரு ஆங்கிலத்தில் கூட உனக்கு சரியாக பேச தெரியவில்லை. நீ எப்போது ஒரு திரைப்பட விமர்சகராக மாறினாய்?எப்போது நீதி தேவதை ஆனாய் என்று எனக்கு தெரியவில்லை” என்று நாக்கூசும் வார்த்தைகளில் நடிகை ஜோதிகாவை விமர்சித்து அவர் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், ” இதுவொரு பிட்சி காஸிப்பிங் செசன். கண்ணா பின்னான்னு கெட்டவார்த்தை பறக்கப் போகிறது. சூர்யா நீ ஒரு மக்கு மடசாம்பிராணின்னு தெரியாம போச்சு. நீ என்னத்த கல்யாணம் பண்ணிட்டு உக்காந்திருக்க. வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ் அபௌட் ஷி போஸ்டட் கங்குவா? அந்தப் படம் எறங்குணது போதாதுன்னு இந்த அம்மணி அவங்க பங்குக்கு எறக்குறாங்க.
ஒரு தப்பான படம் சூர்யாவை நடிகன் இல்லை என சொல்ல முடியாது. சூர்யாவை நடிகன்னு சொன்னது பிதாமகன் தான்.
மும்பையில் ஒரு விழாவில் உள்ளாடை மீது கோட் சூட் போட்டபோதே எல்லோருக்கும் உங்களை பற்றி தெரிந்திருக்கும். உங்கள் கடிதத்தில் நீங்கள் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி ஆகிய படங்களை அவர் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். ஜோதிகா நீங்கள் காது கேட்காமல், கண் தெரியாமல் இருந்ததுபோல் பேசாமலும் இருங்கள். வாயை மூடிக்கொண்டு சிலையாக மாறிவிடுங்கள்” என விமர்சித்துள்ளார்.
சுசித்த்ராவின் இந்த கோபப் பேச்சு பேசுபொருளாகி வருகிறது. கங்குவா குறித்து ஏற்கனவே பலரும் விமர்சனம் என்கிற பெயரில் கடுமையாக பேசி வரும் நிலையில் ஜோதிகாவின் இந்த அறிக்கை தயாரிப்பு தரப்பிலிருந்தே படம் சரியில்லை என்று ஒத்துக்கொண்டது போல் ஆகிவிட்டது. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி திரையரங்கிற்கு ரசிகர்களை வரவிடமால் செய்து விடும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள் சிலர்.
இதனால் படம் ஒரு கட்டத்தில் தியேட்டரிலிருந்து எடுக்கபப்ட்டு விட்டால் நஷ்ட கணக்கு காண்பித்து பலரும் சூர்வாவுக்கு நெருக்கடி கொடுக்க நேரிடும் என்கிற பயம் தயாரிப்பு தரப்புக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சில ரசிகர்களும் கூட இதனை காரணமாக வைத்துக்கொண்டு படம் பார்த்த டிக்கெட்டை வைத்து சூர்யாவிடம் பணத்தை திரும்பக் கேட்கும் சூழல் உருவாகும் என்கிறார்கள்.