No menu items!

கங்குவா – விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கிறது – சூர்யாவை ஆதரித்து ஜோதிகா பதிவு

கங்குவா – விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கிறது – சூர்யாவை ஆதரித்து ஜோதிகா பதிவு

‘கங்குவா’ படம் திரையுலகில் ஓர் அதிசயம். ஊடகங்களும்., சமூக ஊடங்களில் சில தரப்பினரும் இப்படத்துக்கு வெளியிட்டிருக்கும் எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று நடிகை ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கங்குவா படத்தைப் பற்றி நடிகை ஜோதிகா தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது…

இந்தக் குறிப்பை நான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் எழுதுகிறேன், நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல. ‘கங்குவா’ படம் திரையுலகில் ஓர் அதிசயம். சூர்யா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒரு நடிகராக சினிமாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல நீங்கள் காணும் கனவுகளும், முயற்சிகளும் என்னை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நிச்சயமாக ’கங்குவா’ படத்தின் முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை. இரைச்சலாக இருக்கிறது. இந்தியா திரைப்படங்களில் பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், இந்தப் பிழையும் நியாயமானதே. குறிப்பாக, புதிய முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்ட இப்படத்தில் இத்தகைய பிழைகள் இயல்பே! மேலும், அது முழு மூன்று மணிநேரத்தில் இருந்து முதலில் அரை மணி நேரத்தை மட்டும் குறிக்கின்றது. ஆனால், உண்மையில், இது ஓர் அசல் திரையுலக அனுபவமாகும்! கேமரா பணியும் செயல்பாடும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்ததில்லை. ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு பாராட்டுகள்.

நான் ஊடகங்களும்., சமூக ஊடங்களில் சில தரப்பினரும் வெளியிட்டிருக்கும் எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து மிகவும் ஆச்சரியமானேன். ஏனெனில், அவர்கள் இதே மாதிரி பெரிய பட்ஜெட் திரைப்படங்களை முந்தைய காலங்களில் இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்யவில்லை. அவற்றில் பெரும்பாலும் பழமையான கதை மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்த உரைகள் பேசுதல் மற்றும் மிக மிக மிக அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன.

ஆனால், கங்குவா படத்தின் நேர்மையான சாதனைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் பாதியில் பெண்களுக்கான ஆக்‌ஷன் காட்சி மற்றும் கங்குவா எதிர்கொண்ட வஞ்சனை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. கங்குவாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் விமர்சனம் செய்யும்போது, நல்ல பாகங்களை மறந்து விட்டார்கள் என நான் நினைக்கிறேன்.

கங்குவா மீது முதல் நாளில் எதிர்மறை கருத்துகளைத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. முதல் காட்சி முடியும் முன்பே விமர்சனங்கள் வெளியாகின. கங்குவா குழுவின் 3D உருவாக்க முயற்சிகளும் பாராட்டுக்குத் தகுதியானதே. ‘‘கங்குவா’ குழுவே, பெருமைப்படுங்கள்… ஏனெனில் எதிர்மறை கருத்துகளை கூறுவோர், அதை மட்டுமே செய்து, சினிமாவை முன்னேற்றுவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை!

இவ்வாறு ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...