நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும், அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் “நயன்தாரா – beyond the fairy tale” என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தில் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பேசி இருக்கிறார்கள்.
அதன்படி, முதலில் பேசிய நயன்தாரா, தன் முதல் காதல் தோல்வி பற்றி பேசினார். அதன்படி அந்த முதல் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்தது மட்டுமின்றி அந்த காதலில் நான் உண்மையாக இருந்தேன் என தெரிவித்தார். மேலும் அந்த காதலுக்காக நான் மிகவும் நேசித்த சினிமாத் துறையை விட்டு விலக முடிவெடுத்தேன் என கூறிய அவர், திரைத்துறையை விட்டு விலகும் முடிவை தான் சுயமாக எடுக்கவில்லை என கூறி இருந்தார்.
இருப்பினும் என் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இல்லை, இது குறித்து நான் எங்கும் பேசியதும் இல்லை. ஆனால் அந்த காதல் முறிவு குறித்து பலரும் பலவிதமான கதைகளை சொன்னார்கள். ஒரு உறவில் விரிசல் வரும் போது எல்லோரின் கேள்விகளும் பெண் மீது தான் இருக்கிறது. ஆண்களும் கேள்விகளுக்கு உட்பட்டவர்கள்தான் என நயன்தாரா கூறினார்.
பின்னர் விக்கி உடனான காதல் பற்றி பேசிய நயன், பாண்டிச்சேரி சாலையில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒரு நாள் சாலையில் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அன்று நான் விக்னேஷ் சிவனை பார்த்தபோது என்னுள் வித்தியாசமாக உணர்ந்தேன். அப்போது தான் எனக்குள் காதல் ஸ்டார்ட் ஆனது என நயன்தாரா தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஒரு நாள் நயனிடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில் படப்பிடிப்பு நாட்களை மிஸ் பண்றேன் என நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார். நானும் மிஸ் செய்கிறேன் என ரிப்ளை செய்தேன். பின்னர் படிப்படியாக எங்களது காதல் வெளியுலகுக்கு தெரிய வந்த பின்பு, எங்கள் காதல் குறித்து மீம் ஒன்று வந்தது.
அதில் “நாகூர் பிரியாணி அந்த நாய்க்கு தான் கிடைக்கணும்னு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என அந்த மீமில் கலாய்த்து பதிவிட்டிருந்தனர். நானும் அதை காமெடியாகவே எடுத்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையே மாற்றுக் கருத்து வந்தால், நயன்தாரா முடிவுக்கே கட்டுப்பட்டு செல்வது நல்லது. அதை தான் நானும் பின்பற்றி வருகிறேன் என விக்னேஷ் சிவன் கூறினார்.