இந்தியாவின் டாப் 10 பணக்கார பாடகர்கள்திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரையுலக கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் டி.எம்.சவுந்தரராஜன் ஒரு பாடலைப் பாட 500 ரூபாயை சம்பளமாக வாங்கினார். ஆனால் இன்று பல பாடகர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்.
அந்த வரிசையில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 பாடகர்களைப் பார்ப்போம்…
1.ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவாக நிறைய பாடல்களை பாடாத ஏ.ஆர்.ரஹ்மான், குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பாடுகிறார். அதற்கு அவர் வாங்கும் சம்பளம் 3 கோடி ரூபாய்.
2.ஸ்ரேயா கோசல்:
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் முதல் இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்ரேயா கோசலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவின் இப்போதைய முன்னணி பாடகியான ஸ்ரேயா கோசல், ஒரு பாடலைப் பாட 25 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்குகிறார்.
3.சுனிதி சவுகான்:
புதுடெல்லியைச் சேர்ந்தவரான சுனிதி சவுகான், பிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியவர். பாலிவுட்டின் பிரபல பாடகிகளில் ஒருவரான சுனிதி சவுகான், ஒரு பாடலைப் பாட 18 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
4.அர்ஜித் சிங்:
இந்திய திரையுலகில் இப்போது இருக்கும் பிசியான பாடகர் என்று அர்ஜித் சிங்கை சொல்லலாம். இந்தியாவின் முன்னணி மொழிப் படங்களில் எல்லாம் பாடியிருக்கும் அர்ஜித் சிங் ஒரு பாடலைப் பாட 18 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்.
5.சோனு நிகாம்:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நீடித்து நிற்கும் குரல் சோனு நிகாமுடையது. இவர் பாடிய ஹிட் பாடல்களின் எண்ணிக்கையை அத்தனை விரைவில் எண்ணிவிட முடியாது. இந்தியாவின் பிரபல பாடகர்களில் ஒருவரான சோனு நிகாம், ஒரு பாடலுக்கு 15 முதல் 18 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்.
6.பாட்ஷா:
பாட்ஷாவின் இயற்பெயர் ஆதித்ய பிரதீக் சிங். வளர்ந்துவரும் முன்னணி ராப் மற்றும் பின்னணி பாடகரான பாட்ஷா, ஒரு பாடலைப் பாட 18 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார். பாடல்களைப் பாடுவது மட்டுமின்றி கவிஞராகவும் இவர் இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஷான் (10 லட்சம்), நேகா காக்கர் (10 லட்சம்), மிகா சிங் (10 லட்சம்), யோயோ ஹனி சிங் (10 லட்சம்) ஆகியோர் அடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.