No menu items!

அதிக ஓட்டு வாங்கினாலும் அதிபராக முடியாது – அமெரிக்க தேர்தல் சுவாரஸ்யங்கள்

அதிக ஓட்டு வாங்கினாலும் அதிபராக முடியாது – அமெரிக்க தேர்தல் சுவாரஸ்யங்கள்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலைப் பற்றி நாம் தெர்ந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால், அவர் 35 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. ஆனால் அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் இல்லை. அங்குள்ள ஒவ்வொரு மாகாணமும் தங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்தலை நடத்துகின்றனர். அதற்கு அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள்தான் பொறுப்பாக இருக்கிறார்கள்.

அறிவியல் ரீதியாக முன்னேறிய நாடாக இருந்தாலும், அமெரிக்கர்கள் தேர்தலில் வாக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்துகிறார்கள். வாக்கு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததால் அவர்கள் வாக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை.

அமெரிக்க வரலாற்றிலேயே போட்டியில்லாமல் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மனிதர் ஜார்ஜ் வாஷிங்டன்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை ஒரு பெண்கூட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 2016-ல் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்பைவிட 28 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்றபோதும், எலக்டோரல் வாக்குகளை அதிகம் பெறத் தவறியதால் அதிபராக முடியவில்லை. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால், அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

நம் நாட்டைப் போல் அமெரிக்காவில் வேறு வேறு தேதிகளில் தேர்தல் நடப்பதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை (ஒவ்வொரு லீப் ஆண்டிலும்) நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்கிழமை தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் சில குடியரசு கட்சிக்கு ஆதரவாகவும், சில ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவும் இருக்கும். ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, மிச்சிகன், அரிசோனா, விஸ்கான்சின், நெவாடா ஆகிய மாகாண மக்கள் மட்டும் பெரும்பாலும் கடைசி நேரத்தில் தங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கும், நடுநிலை வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதனால் அந்த மாகாணங்கள் battleground states என்று அழைக்கப்படுகின்றன.

அமெரிக்க தேர்தலில் அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்களோ, ஹெச் 1 பி விசா வைத்து அந்நாட்டில் இருப்பவர்களோ வாக்களிக்க முடியாது.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் 24.4 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் வாக்குகளை எண்ணி முடிப்பதாற்கு 2 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...