ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம். சிறுவயதில் இருந்தே பாயிண்ட் பிடித்து பேசுவதில் எக்ஸ்பர்ட் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி . ஆனால், போகிற இடத்தில் எல்லாம் பாயிண்ட் பிடித்துப் பேசி வம்பிழுத்து வரும் பொறுப்பில்லாத கேரக்டர் கொண்டவராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவருடைய இந்த குணாதிசயம் ஜெயம் ரவி அப்பாவிற்கே பிரச்சினையாக மாற ஜெயம் ரவியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். அப்போது ஜெயம் ரவியின் அக்கா பூமிகா அவரை திருத்தி நல்ல பையனாக மாற்றுவேன் என சொல்லி தன்னுடன் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கும் குடும்பமே பிரியும் அளவிற்கு ஜெயம் ரவியால் பிரச்சினை வெடிக்கிறது. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதை கலகலப்பாக சொல்லியிக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
ஜெயம் ரவி இயல்பாகவே கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார். பல இடங்களில் தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்து நடிப்பில் தேர்ந்திருக்கிறார். பிரியங்க மோகன் நாயகியாக ரவியின் கதாபாத்திரத்திற்கு உறுதுணையாக வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பூமிகா நிறைவாக இருக்கிறது அவரது பாத்திரம். நல்ல வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டார் பூமிகா. சீதா, சரண்யா பொன்வண்ணன், நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் படம் முழுவதும் வந்து கலகலப்பூட்டுகிறார்கள். ஆனால் டிவி சீரியல் மாதிரி படம் முழுவதும் எல்லா கேரக்டர்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
சிரிக்க வைக்க வேண்டும் என்று விடிவி கணேஷ் எடுக்கும் முயற்சிகள் பலனிக்கவில்லை. எந்தவித திருப்பங்கள் இல்லாமல் கதை ஒரே நேர்கோட்டில் கதை செல்கிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் மக்காமிஷி அக்கா தம்பி பாடலும் ரசிக்க வைக்கிறது. விவேகானந்தன் ஒளிப்பதிவு சிறப்பு. ராஜேஷின் சிரிப்பு இந்த படத்தில் இல்லை.