No menu items!

ஐந்தாம் வேதம் – விமர்சனம்

ஐந்தாம் வேதம் – விமர்சனம்

இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.

காசியில் பூஜைக்காக சென்ற தன்ஷிகாவிடம், சாமியார் ஒருவர் மரப்பெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, அதனை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார்புரம் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்ல சொல்கிறார்.

அந்த மரப்பெட்டியை உன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது விதி என்று கூறி அதை தன்ஷிகாவின் கையில் கொடுத்ததும் அவர் இறந்து விடுகிறார்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக மரப்பட்டியை தூக்கிக் கொண்டு தமிழகத்திற்கு வருகிறார்., அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிடுகிறார். ஆனால், அதற்கு பின்னால் நடக்கும் திடீர் சம்பவங்கள் தன்ஷிகாவை அய்யங்கார்புரத்திற்கு வர வைத்து விடுகிறது.

அங்கிருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் மரப்பட்டியை கொடுக்கிறார் தன்ஷிகா பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார்.

அதை அந்த கோவிலில் விட்டுவிட்டு அந்த ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார் தன்ஷிகா. ஆனால், கிராமத்தை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், மரப்பெட்டியை அடைய பலரும் முயற்சிக்கின்றனர். மரப்பெட்டியின் மர்மம் தான் என்ன.? ஐந்தாம் வேதம் என்ன.? ஐந்தாம் வேதத்தை கண்டிபிடிக்க தடையாக இருப்பவர்கள் யார் யார்.? என்ற கேள்விகளுக்கான விடை தான் மீதித் தொடருக்கான கதை.

பல வருடங்களுக்கு முன் பலரையும் உறைய வைத்த மர்மதேசம் என்ற தொடரினை இயக்கிய நாகாவின் இயக்கத்தில் தான் இந்த தொடர் உருவாகியிருக்கிறது.

நான்கு வேதங்களை நாம் அனைவரும் அறிவோம். அதென்ன ஐந்தாம் வேதம்.? அந்த வேதம் எதை பறைசாற்றுகிறது.? என்ற கேள்விக்கான விடையை மிக தெளிவாக இத்தொடரின் மூலம் விளக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா.

அவரது வழக்கமான திரைக்கதையில் தொடர் முழுவதும் பரபரப்பாக செல்கிறது. திக் திக் நிமிடங்களில் கதையும், காட்சிகளும் நகர்கின்றன. சாய் தன்ஷிகாவுக்கு அழகான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். அமானுஷ்ய சம்பவங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும் காட்சிகளை விறுவிறுப்பாக மாற்றுகிறது.

நான்கு வேதங்களை மனிதர்களாக உருவக்கப்படுத்தியிருப்பது நல்ல கற்பனை அதனை 5 வேதம் என்ற சஸ்பென்சை வைத்திருப்பதும் இருக்கையின் நுனி வரை நம்மை நகர்த்துகிறது. சாமியாராக தோன்றிய நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பும் மிரட்டியிருக்கிறார். இது மாதிரியான கதைக்களத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ரெவர் செய்திருக்கிறார்.

சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஓரே குறை புராணம் அமானுஷ்யம் என்று மட்டும் செலாமல் அறிவியலை எடுத்திருப்பது சுவாரஸ்யத்தை குறைத்திருக்கிறது. மற்றபடி நாகா ஸ்டைலில் வந்திருக்கும் ஐந்தாவேதம் மிரட்டுகிறது.

ஐந்தாம் வேதம் – ஆச்சரியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...