No menu items!

பெங்களூரு டெஸ்ட் – தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பெங்களூரு டெஸ்ட் – தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராடி வருகிறது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வரலாறு காணாத அளவில் மோசமாக பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இது.

இந்தியாவை 46 ரன்களில் சுருட்டிய பிறகு, பேட்டிங் செய்யவந்த நியூஸிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யத் தடுமாறிய அதே பெங்களூரு ஆடுகளத்தில் நியூஸிலாந்து வீர்ர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தனர். டெவன் கான்வே 91 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டிம் சவுதி 63 ரன்களையும் குவிக்க, நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

நியூஸிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடவந்த இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 35 ரன்களையும், ரோஹித் சர்மா 52 ரன்களையும், விராட் கோலி 70 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சர்பிராஸ் கான் 70 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க இந்திய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணி நியூஸிலாந்தைவிட 125 ரன்கள் பின் தங்கி இருந்தது.

ரோஹித் சர்மா கருத்து

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததைப் பற்றி கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது என்னுடைய முடிவு தான். ஆடுகளத்தில் புற்கள் இல்லை என்பதால் முதல் சில மணி நேரங்கள் மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். அதனாலேயே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம். பொதுவாகவே இந்தியாவில் முதல் மணி நேரம் கடினமானதாக இருக்கும். பின்னர் ஸ்பின்னர்கள் வருவார்கள்.

அதனாலேயே குல்தீப் யாதவை இந்த ஃபிளாட்டான பிட்ச்சில் கொண்டு வந்தோம். இதை விட பிட்ச் பிளாட்டாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும் அது தவறான மதிப்பீடு. இதை நான் சரியாக யூகிக்கவில்லை. இது போன்ற ஆடுகளங்களில் இதற்கு முன் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளோம். இருப்பினும் சில நேரங்களில் உங்களால் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதனால் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...