No menu items!

Red alert, orange alert என்றால் என்ன?

Red alert, orange alert என்றால் என்ன?

மழைக் காலங்களின்போது பொதுவாக சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கைகள் மக்களுக்கு விடுக்கப்படுகின்றன.  இதில் ஒவ்வொரு வண்ண எச்சரிக்கையும் எந்த சூழலில் மக்களுக்கு விடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்…

 மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert):

ஒரு பகுதியில் தோராயமாக 6 செண்டிமீட்டர் முதல் 11 செண்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடிய நிலை இருந்தால், அப்பகுதிக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கிறது.  குறிப்பிட்ட ஒரு இடத்தில் வானிலையால் உடனடி அபாயங்கள் ஏதும் இல்லாதபோதிலும்,  கடுமையான வானிலைக்கு வழிவகுக்கும் நிலைமைகள் உருவாகி வருவதை மஞ்சள் எச்சரிக்கை உணர்த்துகிறது.  

ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert):

ஒரு பகுதியில் ஒரே நாளில் 11 செண்டிமீட்டர் முதல் 20 செண்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடிய சூழல் இருந்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுகிறது. இதன்மூலம் அந்த இடத்தில்  குறிப்பிடத்தக்க இடையூறுகள், ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கடுமையான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது. பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகவும், வானிலை நிலவரம் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் இந்த ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை (Red Alert):

மழை தீவிரமடையும் காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தால் விடுக்கப்படும் உச்சகட்ட எச்சரிக்கை ரெட் அலர்ட் ஆகும். ஒரு இடத்தில் ஒரே நாளில் 20 செண்டிமீட்டர் அளவுக்கு மேல்  மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுக்கிறது.

ஒரு இடத்தில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டால், அந்த இடத்தில் வானிலை நிலைமைகள் விரைவில் நிகழப் போகிறது என்றும், உயிர் மற்றும் உடைமைகளுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படப் போகிரது என்று பொருள். இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 3 வண்ணங்களையும் தவிர பச்சை நிறத்தையும் மழைக்காலங்களில் வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது. நமது பகுதிக்கு பச்சை வண்ணத்தை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தினால், மழையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...