No menu items!

திடீர் கனமழைக்கு என்ன காரணம்? – மதுரை ஆதீனம் புதிய விளக்கம்

திடீர் கனமழைக்கு என்ன காரணம்? – மதுரை ஆதீனம் புதிய விளக்கம்

அதி கனமழையை எதிர்பார்த்து சென்னை தயாராக இருந்த நிலையில், சென்னையில் இன்று மழை குறைந்துவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட மழை ஏன் பொய்த்துப் போனது என ஆய்வாளர்கள் வானிலையை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பெய்து வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் சூழந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இம்மாவட்டங்களில் இன்றும் (அக். 16) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முழுவதும் சென்னையில் பல இடங்களில் தொடர் மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதல் மழை படிப்படியாக குறைந்தது. இருப்பினும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்போது லேசான மழையே பெய்து வருகின்றது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்காமல், ஆந்திராவை நோக்கி நகர்வதால் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் அப்டேட் கொடுத்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்,” சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த சில மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களில் சீரான அளவிலேயே மழை தொடரும். சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்த்து ஆந்திராவை நோக்கியுள்ளது. இதனால் சென்னைக்கு அதிகன மழை வாய்ப்பு குறைந்துள்ளது. சாதாரண மழை மட்டுமே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பெய்து வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கு மதுரை ஆதினம் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதினம், “தமிழ்நாட்டில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்” என மதுரை ஆதினம் தெரிவித்தார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...