No menu items!

ஆரம்பிக்கலாமா?…வெளுக்க காத்திருக்கும் மழை!

ஆரம்பிக்கலாமா?…வெளுக்க காத்திருக்கும் மழை!

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுக்கப்போகும் மழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (13-10-24) முன்தினம் இரவு மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் நேற்று கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று நள்ளிரவில் சென்னையிலும் மழை கொட்ட ஆரம்பித்து இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில், “இன்று தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளத” என்று தெரிவித்துள்ளது.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்தது.

நாளை (15-10-24) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையையும், பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த மழைக்கு என்ன காரணம்?

முன்னதாக, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொன்னது போலவே சரியாக 14ஆம் தேதி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழையின் வருகைக்காக தமிழகம் காத்திருந்த நிலையில், தென் தமிழகக் கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சியும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இயல்பைவிட அதிக மழை

மேலும், “இயல்பை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம். எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) போன்ற உலகளாவிய காலநிலை காரணிகள் பருவமழை இயக்கவியலில் பங்கு வகிக்கும் என்று பாலச்சந்திரன் கூறினார்.

“தற்போது, பசிபிக் பெருங்கடலில் நடுநிலை ENSO நிலைகள் காணப்படுகின்றன, பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் லா நினா உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, ராயலசீமா, கேரளா, மாஹே மற்றும் தெற்கு உள் கர்நாடகம் இந்த அதிகரித்த மழையால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த முறை தமிழகத்தில் வழக்கமான வடகிழக்கு பருவமழையை விட அதிக மழை பெய்யும்” என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...