மீண்டும் அதிர ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். அதிர வைத்திருப்பவர் ஓவியா. ஒரு சில்மிச வீடியோ. அதற்கு அவர் காட்டிய அலட்சிய மனோபாவம் என்று இணையத்தில் ஒரே கொந்தளிப்பு.
ஓவியாவை பொறுத்தவரை சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர். களவாணி படத்தில் இவது குறும்பான நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் இருக்கும் அணுசரிப்பு கலாச்சாரம் எல்லாம் தெரிந்திருந்தாலும் தனக்கு எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதில் மட்டுமே ஓவியா நடித்து வந்தார்.
அப்படி கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு படம் வரைக்கும் நடித்து பரபரப்பாக இருந்தார். அப்போதுதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிக்பாஸுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சில்மிச காட்சிகளுடன் இருக்கும் அந்த வீடியோவை சிலர் ஓவியாதான் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சீசன் என்று சொல்லும் அளவுக்கு தன்னை வெளிபடையாக காட்டிக்கொண்டார் ஓவியா. தன் மனதில் பட்டதை பேசி பார்வையாளர்களிடம் கைதட்டல் பெற்றார். இத்தனைக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே போட்டியாளர் ஆரவை காதலிப்பதாக பேசப்பட்டவர். அப்போதே ஓவியாவும் ஆரவும் நெருக்கமாக இருக்கும் குறும்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் அது பற்றியெல்லாம் ஓவியா அப்போதும் கவலைப்படவில்லை. இப்போதும் கவலைபடவில்லை. அந்த வீடியோவில் இருக்கும் பெண் கையில் டாட்டூ குத்திக் கொண்டிருப்பதை வைத்து நெட்டிசன்கள் சிலர் அது ஓவியாதான் என்று சத்தியம் செய்து வீடியோவை ஆர்வமாக பகிர்ந்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு பதில் கொடுத்த ஓவியா நல்லா என்ஜாய் பண்ணுங்க.. அடுத்த முறை ஹெச் டி படம் அனுப்புறேன் என்றெல்லாம் ரசிகர்களுக்கு பதில் கொடுத்து தன்னை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனத்தை இடது கையால் டீல் செய்து விட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
ஓவியாவின் இந்த துணிச்சலை பார்த்து நெட்டிசன்கள் விக்கித்துப் போயிருக்கிறார்கள். இப்போது அப்படியே திரும்பி ஓவியாவுக்கு ஒரு பக்கம் பாராட்டும் கிடைத்து வருகிறது. பெண்கள் தங்களை இது போன்று மிரட்டும் வக்கிரபுத்திக்காரர்களுக்கு பயந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு ஒவியாவின் துணிச்சல்தான் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
இதே போன்று ஒரு கட்டத்தில் திரிஷாவுக்கும் நேர்ந்தது. அவரது குளியல் வீடியோ என்று பரவிய காணொளியால் திரையுலகம் அதிர்ந்து போனது. அது நான் அல்ல என்று திரிஷா கூறினாலும் அந்த அலை அடங்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல ஹன்சிகா மோத்வானிக்கும் இதே போன்று பாத்ரூமில் குளிக்கும் வீடியோ என்று பரவி ஷாக் கொடுத்தது. இதனால் ஹன்சிகா சில நாட்கள் மீடியாக்களை சந்திப்பதையே தவிர்த்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரஸ் மீட்டில் லட்சுமி மேனன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தொடர்பான வீடியோ ஒன்று ரகசியமாக மீடியாக்கள் வட்டாரத்தில் பரவியிருந்த நேரம். இது பற்றி நேரடியாக லட்சுமி மேனனிடம் கேட்டே விட்டார் பத்திரிகையாளர் ஒருவர். உடனே லட்சுமி மேனன் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று சொன்னார். ஒரு கட்டத்தில் அது எல்லாமே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
இப்படி வரும் வரும் தகவல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீதமான முடிவுகளை எடுக்காமல் துணிந்து அதை எதிர் கொண்டு அதிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு ஓவியாவின் துணிச்சலை எடுத்துக் கொள்ளலாம்.