No menu items!

ஹரியானா தேர்தல் – பாஜக அடித்த ஹாட்ரிக்!

ஹரியானா தேர்தல் – பாஜக அடித்த ஹாட்ரிக்!

ஹரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஹரியானா மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன.   தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின.  ஆனால் கருத்துக் கணிப்புக்கு மாறாக அம்மாநிலத்தில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானாவில்  மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 50 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளையும் பெற்றுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் கட்சி 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. பின்னர் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

5 அமைச்சர்கள் முன்னிலை

பாஜக ஆட்சியில் உள்ள பத்து அமைச்சர்களில் ஐந்து பேர் முன்னிலை பெற்றுள்ளனர். முதல்வர் நயாப் சைனி (லட்வா), மூல் சந்த் சர்மா (பல்லாப்கர்), அபே சிங் யாதவ் (நாங்கல் சௌத்ரி), மஹிபால் தண்டா (பானிபட் கிராமம்) மற்றும் ஜெய் பிரகாஷ் தலால் (லோஹாரு) ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான துஷ்யந்த் சவுதாலா, உச்சன கலன் சட்டமன்றத் தொகுதியில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

வினேஷ் போகத் வெற்றி

ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...