No menu items!

டி20 தொடர் யாருக்கு? – இந்தியா – வங்கதேசம் மோதல்

டி20 தொடர் யாருக்கு? – இந்தியா – வங்கதேசம் மோதல்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி 6-ம் தேதி குவாலியரில் நடக்கிறது.

வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் இம்முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்த ரீதியாக பல விஷயங்களை இந்த தொடரில் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் செய்வாஅர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அபிஷேக் சர்மா மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக அணியில் இருக்கிறார். அதனால் இம்முறைன் அவருடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்கார்ராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக வேகப்பந்து வீசிய மயங் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி முற்ரிலும் புதிய வீர்ர்களை பயன்படுத்த, வங்கதேச அணி அனுபவம் வாய்ந்த வீர்ர்களுடன் இந்த தொடரை சந்திக்கிறது.

முதலாவது டி 20 போட்டி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது..

நாங்கள் இந்தத் தொடரை வெல்லப் பார்ப்போம். நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். கடந்த டி20 உலகக் கோப்பையில் நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் அதைத் தவற விட்டோம். இருப்பினும் இது புதிய அணி. இந்தப் புதிய அணியில் இருக்கும் அனைவரும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது தெரியும்.

டி20 வித்தியாசமான விளையாட்டு. இங்கே அன்றைய தினம் நன்றாக விளையாடுபவர்கள் தான் வெல்ல முடியும். இங்கே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க வீரர்கள் அல்லது பெரிய வீரர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. போட்டி நாளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் அசத்தும் அணியே வெல்லும். நாங்கள் அந்த அணியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது எங்களுக்கு முக்கியமான தொடர். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முதல் போட்டி நடைபெறும் குவாலியர் பிட்ச் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இங்கே பயிற்சிகளை செய்து விரைவாக நாங்கள் எங்களை சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...