No menu items!

கமலுக்கு கைக்கொடுக்குமா தக் லைஃப் திரைப்படம்

கமலுக்கு கைக்கொடுக்குமா தக் லைஃப் திரைப்படம்

கமல்ஹாசன், நாயகன்  படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் விலகியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவர்களின் தேதிகளை குறித்த நேரத்தில் பயன்படுத்த முடியாமல் போனதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பாத்திரங்களையும் ஒன்றாக மாற்றி பவர்புல் வேடமாக மாற்றியிருக்கிறார் மணிரத்னம்.   இதற்கு சிலம்பரசன் என்கிற வெயிட்டான நபரை நடிக்க வைத்து மிரட்டல் செய்திருக்கிறார் மணி.

படத்தின் ட்ரைலரில் ரங்க ராய சக்திவேல் நாயக்கர் என்ற கமலின் பாத்திரமே நிறைய சஸ்பென்ஸ் வைத்து காட்டியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் அதன் வியாபரம் நடந்து கொண்டிருக்கிறது.

கமலின் சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமான லாபத்தை கொடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில்தான்.  அதை ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதால் விமர்சனத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்கிற அக்கறையால் வியாபாரத்தை வெளிப்படைதன்மோடு செய்திருந்தார். உதயநிதி ஸ்டாலின்.  100 கோடி லாப தொகையோடு  அதிகபட்ச லாபமான தொகையாக சில கோடிகளைக் கொடுத்து கமல்ஹாசனை வியக்க வைத்தார். இதனால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டானது. 

இதன்பிறகுதான் தனது ராஜ்கமல் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உதயநிதியை நடிக்க வைக்க திட்டமிட்டார்.  ஆனால் அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் மேலிடத்தின் அனுமதி கிடைக்கவில்லை. அவர் நடிக்க வேண்டிய அந்த பாத்திரத்தில்தான் தற்போது சிம்பு நடித்து வருகிறார்.

தக் லைஃப் படத்தின் வியாபரத்த்தில் கமல்ஹாசன் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். அவருக்கு விக்ரம் படத்தில் கிடைத்த அதே பிரமாண்ட வியாபாரம் இந்த படத்திலும் கிடைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சேனல் உரிமை விற்பனையில் பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் போயிருக்கிறது என்கிறார்கள். விக்ரம் படத்தில் கிடைத்த லாபத்தில் தனக்கு இருந்த கடன்களை அடைத்திருக்கிறார். அதோடு வங்கிக் கடன் அடமானத்தில் இருந்த சில சொத்துக்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறார் கமல்ஹாசன்.  அதே அளவான வியாபாரத்தை இந்த படத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  முதற்கட்டமாக சேட்டிலைட் விற்பனை முடிந்திருக்கிறது.   அடுத்த கட்டமாக வெளிநாட்டு உரிமை, மற்றும் தியேட்டர் வசூல்  கமல் எதிர்பார்த்த தொகைக்கு விற்கப்படுமா என்பது இனிமேல் தெரிய வரும்.

இப்படியாக கமல்ஹாசனுக்கு தக் லைஃப் திரைப்படம் டஃப் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. ஒரு திரைப்படமாக முழுமையான வடிவத்தில் வந்திருக்கிறது என்பதில் மகல், மணிரத்னத்திற்கு  திருப்திகரமாக இருக்கிறது. 

கமலின் அடுத்த இலக்கு ராஜ்கமல் நிறுவனத்திற்கு ரஜினியிடமிருந்து ஒரு திரைப்படம் நடித்துக் கொடுக்க கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதே. முயற்சி கமல்ஹாசனுக்கு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தயாரிக்கும் அளவுக்கு தக் லைஃப் திரைப்படம் லாபத்தைக் கொடுக்குமா என்பதே பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...