No menu items!

என்ன பேசினார் மோகன்ஜி? – கைது ஏன்?

என்ன பேசினார் மோகன்ஜி? – கைது ஏன்?

திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜியை தமிழ்நாடு காவல்துறையினர் இன்று கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் சாதியை கொண்டாடும் திரைப்படங்கள் எடுக்கத் தொடங்கியதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மோகன் எடுத்த திரௌபதி திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுக்கும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சித்தலைவரை அடையாளப்படுத்தும் வகையில் கதாபாத்திரத்தை உருவாக்கி நாடக காதல் செய்வர்களுக்கு ஆதரவாக அவர் செயல்படுவது போன்ற காட்சி வைத்திருந்தார்.

இதனால் இந்த படம் திரையிட்டபோது சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த திரைப்படம் தொழில் நுட்ப ரீதியாகவும், கதை அமைப்பிலும் மிகவும் மோசமான தயாரிப்பாக இருந்தது. ஆனாலும் இந்த சர்ச்சையான காட்சியை திரைபப்டத்தில் வைத்து அதன் மூலம் படத்தை ஓட வைக்கும் விதமாக நடந்து கொள்கிறார் என்ற அடையாளம் இவருக்கு உருவானது. அடுத்த படமான பகாசுரன் திரைப்படத்திலும் இது போன்ற காட்சியை வைத்து அதிலும் வெளிச்சத்தைத் தேடிக்கொண்டார். இப்படி ஒவ்வொரு படத்திலும் விவகாரத்தை ஏற்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் நடந்து கொண்டாரே தவிர, எல்லா வகையிலும் சரியான ஒரு முழுமையான திரைப்படத்தை இதுவரைக்கும் அவர் எடுக்கவில்லை என்கிறார்கள்.

அதோடு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் திரைப்பட விழாக்களில் பேசுவதும் அது குறித்து விவாதம் எழுவதும் தொடர்கதையாகி வருகிறது. இன்று அதைப்போன்ற ஒரு பேச்சை பேசியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டுக்கொழுப்பு கலந்திருக்கிறது என்ற விஷயம் பரவி அது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பதிலும் முறைகேடு இருப்பதாக பேசியிருக்கிறார். இது ஆன்மீகவாதிகள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பழநில் கோவிலில் பல ஆண்டுகளாக பிரசாதமாக பார்க்கப்படுவது அங்கு கொடுக்கப்படும் பஞ்சாமிர்தம் தான். இது ஒரே சுவையில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறையை ஏற்படுத்தும் வகையில் ஒரு பொருள் கலக்கப்படுவதாக மோகன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது வீணான குழப்பத்தை பொதுவெளியில் உண்டாக்கியிருக்கிறது. இந்த காரணங்களுக்காக போலீஸ் மோகனை கைது நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. . மேல் விசாரணைக்காக அவரை தனிப்படை போலீஸார் திருச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

திரைத்துறை மட்டுமே அனைத்து சாதி, மதத்தினர் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒன்றாக உலவும் இடமாக இருக்கிறது. இங்கேயும் சாதிய வேறுபாடு என்பது உருவாவது எதிர்காலத்தில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்.

கருப்பு வெள்ளைக் காலத்தில் திரைப்படத்துறையில் சாதியை குறிப்பிடும்படியான திரைப்படங்கள் வந்திருந்தாலும்கூட அதனை கதாபாத்திரங்களாக பார்க்கும் மனநிலைதான் இருந்தது. பொதுவெளியில் மோதல் போக்கை ஏற்படுத்தும் அளவுக்கு அது வளராமல் பார்த்துக் கொண்டார்கள்.

இன்றைய இளம் இயக்குனர்கள் பலரும் இந்த சாதிய அடையாளத்திற்குள் மாட்டி, அதன் மூலம் தங்கள் மீது விளம்பர வெளிச்சம் படுவதையே விரும்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...