No menu items!

வேள் பாரி கதையை திருடினாரா தெலுங்கு இயக்குனர் ?

வேள் பாரி கதையை திருடினாரா தெலுங்கு இயக்குனர் ?

ஷங்கரின் ஒரு எக்ஸ் தள பதிவினால், முன்னணி இயக்குனரான ஷங்கருக்கே இப்படி ஒரு நிலையா என்று அதிர்ச்சியடைந்திருக்கிறது தமிழ் சினிமா பிரபலங்கள்.

பொதுவாக சினிமாவில் சமீப காலமாக கதையை தழுவியோ, அப்பட்ட மாக காட்சிகளை எடுத்துக் கையாண்டோ ஒரு படத்தை உருவாக்குவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுவதும், அடங்கிப்போவதும் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஷங்கர் கனவு படமாக நினைத்துக் கொண்டிருக்கும் வேள்பாரி கதையை ஒரு படத்தில் வைத்திருப்பதாக டுவிட்டரில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் தெலுங்கு படமான தேவரா படத்தின் ட்ரைலர்தான் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் காட்சியில்தான் வேள்பாரி நாவலின் ஒரு காட்சியை வைத்திருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

சு.வெங்கடேசன் எழுதிய இந்த வேள்பாரி நாவல் பலராலும் வாசிக்கப்பட்டு வந்தது. பொன்னியின் செல்வன் நாவலுக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட நாவலாக வேள்பாரி இருக்கிறது. இந்த நாவலின் உரிமையை படமாக்க ஷங்கர் விரும்பி அதை திரைப்படமாக்க உரிமையை சு.வெங்கடேசனிடமிருந்து பெற்று வைத்திருக்கிறார்.

இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் தள அறிக்கையில் “நவ யுக நாயகன் வேள்பாரி” என்கின்ற நாவலின் மொத்த உரிமமும் சு. வெங்கடேசன் அவர்களிடம் தான் இருக்கிறது. ஆனால் அந்த கதையின் அடித்தளமாக இருக்கும் பல காட்சிகள் அண்மையில் நான் கண்ட ஒரு திரைப்பட ட்ரெய்லரில் இடம் பெற்றிருப்பதை கண்டு மிகப்பெரிய வருத்தங்களுக்கு உள்ளானேன். இது எந்தவித அனுமதியும் இல்லாமல், அவரிடமிருந்து உரிமம் பெறாமல் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் என்பதை நான் அறிவேன். ஆகவே அந்த காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக அதை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். அல்லது இந்த வேள்பாரி நாவல் சம்பந்தமாக சட்ட ரீதியான முறையில் என்னுடைய பணிகளை செய்யவேண்டியிருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஷங்கரின் இந்த மனவலியான பதிவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு வரலாற்றுக் கதையிலிருந்து காட்சிகளை திருடும் பழக்கம் புதிதாக நடக்கவில்லை. இந்திய சினிமாவே வியந்து பார்த்த ராஜமவுலி இயக்கிய பாகுலி திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் தமிழ் நாவலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. பிரபல நாவலாசிரியரான சாNடில்யன் எழுதிய யவன ராணி, கடல் புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களில் இடம்பெற்ற காட்சிகளை வைத்திருப்பதாக அப்போதே பேச்சு எழுந்தது. இது போல பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்று ஷங்கர் என்ற பெரிய இயக்குனர் அதை வெளிப்படுத்தியிருப்பதால் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த முறையாவது சரியான நடவடிக்கைகளை உரியவர்கள் எடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரங்களையும், வரலாற்று காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்யும் வகையில் எழுத்து வடிவில் உருவக்கப்படுத்தி வைக்கும் படைப்பாளிகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்திற்கே உரிய விஷயங்களை வணிக நோக்கத்திற்காக மொழி கடந்து எடுத்துச் செல்வதை அனுமதிக்கக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...