தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் நன்றாக ஓடி வசூல் செய்து விட்டால் அந்தப்படத்தை அனைத்து மொழிகளிலும் அதனை ரீமேக் செய்ய விரும்புவார்கள். படைப்பிலும், உருவாக்கத்திலும் அது எல்லா ரசிகர்களின் மன நிலைக்கும் ஒத்துப் போவதாகவே இருப்பதுதான் காரணம். அந்தளவுக்கு மரியாதை உள்ள தமிழ் சினிமா இன்று அதன் போக்கிலிருந்து மாறுகிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது. இந்த படைப்புகளை உருவாக்க உயிர்கொடுக்க கருவியாக இருக்கும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சமீபகாலமாக வரும் தகவல்கள் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இளம் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என்று ஒரு நட்புக்குழு சினிமாவில் புதிய கலாச்சாரத்தை ஏறடுத்தினார்கள். அதாவது இரவு முழுவதும் விழித்திருந்து தங்கள் பணிகளைச் செய்வது. பகல் முழுவதும் வீட்டுக்குள் முடங்கிப்[போய் தூங்கி விடுவது. இப்படியொரு எதிர்மறையான வாழ்க்கை முறைக்கு தங்களைப் பழக்கபப்டுத்திக் கொண்டிருந்தனர்.
இரவு நேரம் என்பதால் துறை சார்ந்த வேலைகள் மட்டுமல்லாமல் வேண்டாத பழக்கங்களும் தானாக தேடி வந்து சேர்ந்தது. இருட்டில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வராமலா போகும். அப்படி பல பிரபலங்களின் வாழ்க்கை வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. மது போதை, படுக்கை அறை பழக்கம் அப்போது எடுக்கபப்ட்ட புகைப்படங்கள், புகை மூட்டத்திற்கு இடையே அரைகுறை ஆடையுடன் நடிகைகள், நடிகைகளுடன் உதட்டு முத்த வீடியோக்கள் என்று ஒவ்வொன்றாக வெளியாக ஆரம்பித்தது. அது சுசி லீக்ஸ் என்ற பெயரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பிறகுதான் ஒரு இளம் தலை முறையினரே இப்படியான பார்ட்டி, போதை, படுக்கை என்று வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மை வெளியுலகிற்கு வந்தது. இதன் வீடியோக்களும், போட்டொக்களும் எங்கோ இருக்கும் சாதாரண ரசிகர்கள் கையில் போன்களில் புரண்டது. இதன் எதிரொலியாக நட்சத்திரங்களின் வீடுகளில் புகைச்சல் உண்டானது.
இதைத்தொடர்ந்து சோனியா அகர்வால் விவாகரத்து, டிடி, அமலாபால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்த்ர்யா என்று பலரும் விவாகரத்துகளை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இடைவெளி விட்டு ஒவ்வொருவராக குடும்ப வாழ்க்கையை பிரிந்து செல்வதை யாராலும் தடுக்கவும் முடியவில்லை. அது தற்போது ஜெயரவி வரைக்கும் வந்து நிற்கிறது. இந்த பிரிவு விவகாரத்தில் இன்னும் சிலரின் பெயர்கள் அடிபடும் என்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணையத்தில் வெளியாக இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இளம் தலைமுறை விஐபி திரைபிரபலங்கள் தங்கள் குடும்ப உறவுகளை இழப்பது அதிகரித்திருக்கிறது. இளம் வயதில் கிடைக்கும் பெரும் புகழும் அளவுக்கு அதிகமான சம்பளமும் ஆண்களுக்கு அடுத்தக்கட்ட பொழுதுபோக்கை மனம் தேடுவதும். குடும்ப உறவுகளுடன் அமர்ந்து பேச நேரம் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிகளுக்காக வெளியூரில் தங்க வேண்டிய நிலையும் தான் இந்த நிலைக்கு முதல் காரணமாக அமைகிறது.
குறிப்பாக மன மகிழ்ச்சிக்காக கூடும் நடக்கும் பார்ட்டிகள் புதிய சந்திப்புகளை ஏற்படுத்துவதுடன் அந்த நட்பு எல்லை மீறிப்போனவுடன் அதன் எதிர்விளைவுகளை சந்திக்க நேர்கிறது. தற்போது நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைத்திருப்பது போலவே, உளவியல் ரீதியகான கவுன்சிலிங்கை கொடுக்கவும் ஒரு குழுவை நடிகர் சங்கம் அமைக்க வேண்டும். நடிகர்கள் குடும்பமாக சந்தித்து தங்கள் பிரச்சனைகளைப் பற்றி மனம் விட்டு பேசி தீர்வு காண்பதும் நடந்தால் இது போன்று குடும்ப உறவுகள் சிதைந்து போகாமல் காப்பாற்றலாம் என்கிறார் மூத்த தயாரிப்பாளர் இயக்குனர்.