No menu items!

செக்ஸ் தொந்தரவு – உருவாகும் நடிகைகள் சங்கம்!

செக்ஸ் தொந்தரவு – உருவாகும் நடிகைகள் சங்கம்!

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறிக்கொண்டிருக்கிறது ஹேமா கமிஷனின் செக்ஸ் புகார். இந்திய சினிமாவின் ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு நடிகை தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் அநியாயங்களை மனம் விட்டு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழிலும் இப்போது நடிகைகள் இது பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஷகிலா, சார்மிளா,லட்சுமி ராமகிருஷ்ணன், ராதிகா,குஷ்பூ என்று பலரும் இது பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  இந்த வரிசையில் ரேகா நாயர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் சினிமாவில்  பாலியல் தொல்லை குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது,

ஒன்றா இரண்டா நிறைய இருக்கு. லட்சக்கணக்கானது இருக்கு. நான் குரல் கொடுத்தா எனக்கு இங்க சினிமால வாய்ப்பு கிடையாது. அதனாலேயே பல நடிகைகள் குரல் கொடுப்பதில்லை. மலையாளத்திலாவது 10, 20 விக்கெட்டு தான் விழுது. இங்க தமிழ் சினிமால லிஸ்ட் எடுத்து பார்த்தால் 500, 600 விக்கெட் விழும்.  திறமையாளர்களை மதிப்பதில்லை. நல்லா நடிக்க, டான்ஸ் ஆட தெரிந்தவர்களை காட்டிலும் யார் சொல்பேச்சை கேட்பார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இப்போ ஒரு நடிகை குரல் கொடுத்தால், மற்ற ஆண் நடிகர்களின் மிரட்டல்களுக்கு ஆளான பெண்கள் இங்கு அதிகளவில் இருக்கிறார். பல நடிகைகள் வீடு உடைக்கப்பட்டிருக்கு. மலையாளத்தில் உச்சத்தில் இருந்த நடிகை இந்த ஊரைவிட்டே ஓடும் அளவுக்கு இங்கு பிரச்சனை செய்திருக்கிறார்கள்.

புகார் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைமையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஆஃபிஸ் போனா ஆளே இருக்க மாட்டாங்க. விஷால் செருப்பால அடிங்கனு சொல்லிருக்காரு, ஆனா அவரு சொல்றதுக்கு முன்னாடியே நான் அடிச்சுட்டேன். அடிச்சவங்கள நீங்க எப்படிசித்தரிச்சிங்க, அடிவாங்குனவங்கள நீங்க எங்கபோய் வச்சிருக்கீங்க. அவருடைய பதவியை பறித்தீர்களா 2014ம் ஆண்டே ஒரு ரியாலிட்டி ஷோ முடிந்து பல பெண்களை மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை நான் அந்த ஷோவிலேயே ஓப்பனாக கூறினேன். அது நடந்து 10 வருஷம் ஆச்சு இப்பயும் அதையே தான் பேசுகிறோம். மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன”என்று ரேகா நாயர் பேசியிருப்பது இன்னொரு  சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில் பெரிய முன்னணி கதாநாயகர்கள் இந்த ஹேமா கமைசன் அறிக்கையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லதல்ல என்று ராதிகா பேசியிருக்கிறார்.  மலையாளத்தில் அமைத்த கமிசன் போல தமிமிலும் ஒரு கமிசன் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

அதற்கு முன்பாக நடிகைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்க இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் திரையுலகம், சின்னத்திரை வட்டாரம் ஆகிய இடங்களில் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானால் அது குறித்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும், அதனால் விரைவில் அது குறித்த தகவல்கள் வரும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...