No menu items!

42 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்பானி

42 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்பானி

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரும், தன் மகனுக்கு ஆயிரக் கணக்கான கோடிகள் செலவழித்து திருமணம் செய்து வைத்தவருமான முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தில் இருந்து 42 ஆயிரம் பேரை கடந்த ஆண்டில் நீக்கியிருப்பது அந்நிறுவனத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரது குடும்பத்துக்கு மொத்தம் 25.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக Barclays Private Clients Hurun என்ற அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்ந்தியாவின் ஓராண்டுக்கான மொத்த உற்பத்தியில் 10 சதவீதமாகும்.

இந்த அளவுக்கு சொத்துகளை வைத்திருந்தும், தன் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் கருணை காட்டும் மனம் அம்பானியிடம் இல்லை. கடந்த நிதியாண்டில் மட்டும் 42 ஆயிரம் தொழிலாளர்களை அவர் வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 11 சதவீதமாகும்.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் அந்நிறுவனத்தில் மொத்தம் 3,89,414 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். நிதியாண்டின் இறுதியில் இது 3,47,362 – ஆக குறைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் 53.9 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 21.4 சதவீதம் பேர் பெண்கள், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களில் 81.8 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் அதிகமானோர் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் இருந்துதான் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கமே இந்த துறையில் அதிக ஊழியர்களை நீக்குவதற்கான காரணம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக தேங்கி நிற்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது ஐடி நிறுவன்ங்களும் ஏராளமான ஊழியர்களை வெளியேற்றி வருகிறது. டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவன்ங்களில் இருந்து கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தமாக 63,750 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...