No menu items!

தமிழ்நாட்டுக்கு 0  – மற்ற மாநிலங்களுக்கு 35,125 கோடி – என்ன நடக்கிறது நாட்டில்?

தமிழ்நாட்டுக்கு 0  – மற்ற மாநிலங்களுக்கு 35,125 கோடி – என்ன நடக்கிறது நாட்டில்?

சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம் என்பது மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுதாகவும் இதனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சென்னையில் இப்போது மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று திமுக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், இதுபற்றி, இப்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பி தயாநிதி மாறான் கேள்வி எழுப்பினார். “சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியின் நிலை என்ன? தாமதத்திற்கு காரணம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பிற மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் வழங்கப்பட்ட நிதி குறித்த விபரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார். அதில், சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் என்பது தற்போது மாநில அரசுன் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதாகவும் இதனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மாநில அரசே செலவு செய்வதாகவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் பதிலளித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் எந்த மாநிலங்களில் எல்லாம் மெட்ரோ அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்த தகவல்களும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி நாக்பூர் மெட்ரோ 2ம் கட்டம், புனே மெட்ரோ விரிவாக்கம், கான்பூர் மெட்ரோ, ஆக்ரா மெட்ரோ, கொச்சி மெட்ரோ முதல் மற்றும் 2ம் கட்டம், டெல்லி மெட்ரோ 4ம் கட்டம், குருகிராமில் அமையும் மெட்ரோ, அகமதாபாத் மெட்ரோ, சூராத் மெட்ரோ ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கடந்த 2 நிதியாண்டுகளில் மத்திய அரசு இதில் அதிகபட்சமாக டெல்லி- காசியாபாத்- மீரட் மெட்ரோவுக்கு ரூ. 43,431 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும், பெங்களூர் மெட்ரோவுக்கு ரூ. 7658 கோடியும், மும்பை மெட்ரோவுக்கு 4,402 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. இது தவிர கான் பூர் ரூ.2,629 கோடி, அகமதாபாத் ரூ. 2596 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கொச்சி மெட்ரோவுக்கு ரூ. 146 கோடியும், போபால் மெட்ரோவுக்கு ரூ. 830 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதுபோல பல்வேறு நகரங்களில் அமையும் மெட்ரோ திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டம் இப்போது மாநில அரசுன் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுள்ளது.

சென்னையில் இப்போது விம்கோ நகர்- சென்னை ஏர்போர்ட், சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை என 2 ரூட்களில் இயங்கி வருகிறது. அடுத்தக் கட்டமாக 116 கிமீ தொலைவுக்கு மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க இப்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த ரூட்டில் 2026 முதல் படிப்படியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...