இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை விஷயத்தில் நாளுக்கு நாள் நடப்பது விசித்திரமாக இருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் பாடலை பயன்படுத்தியதற்காக 60 லட்சம் இளையராஜா தரப்பிற்குக் கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து நலா பக்கமும் இந்தத்தகவல் செய்திகளாக வெளியிடப்பட்டன, ஆனால் இதில் கொஞ்சமும் உண்மையல்ல என்று இளையராஜா தரப்பில் சொல்லப்படுகிறது.
இது பற்றி விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள் இசையாப்ப சிக்கலாகி இருப்பது தெரிகிறது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் கதையோட்டத்திற்காக குணா திரைப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு என்ற பாடலை இயக்குனர் சிதம்பரம் வைத்திருந்தார். இதனை படம் வந்தபோது இளையராஜா தரப்பு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் சில நாட்களில் படம் பெரிய அளவில் பிக் அப் ஆகி 100 கோடியை நெருங்கி விட்டது. பாடலும் ரசிகர்களால் மீண்டும் ஒரு முறை கொண்டாடப்பட்டது, இந்த பாடலுக்குக் கிடைத்த வரவேற்பும் படத்தின் பிரமாண்டமான வெற்றியும் இளையராஜா தரப்பில் நடவடிக்கை எடுக்கத் தூண்டியது என்று சொல்லலாம்.
அதன்படி மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது அவர்கள் தரப்பில் நாங்கள் உரிய அனுமதி பெற்றுத்தான் பாடலை பயன்படுத்தியிருக்கிறோம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எப்படி யாருக்கு அந்த்த்தொகை கொடுக்கப்பட்டது என்கிற விபரம் இல்லை. அதனால் இளையராஜா தரப்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு 60 லட்சம் கொடுத்து விட்டதாக செய்தி பரவியிருப்பது இளையராஜா தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத்தகவலை பஎடத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து பரவ விட்டிருப்பதாக் சொல்லப்படுகிறது. காரணம் அப்படி யாரிடமும் இளையராஜா பணம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் உண்மையான நிலை குணா படத்தின் பாடல் உரிமை ராஜா ரெக்கார்டிங் என்ற இளையராஜாவின் சொந்த நிறுவனத்திடம் இருந்தது. இங்கிருந்து உரிமை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. இப்படியே உரிமை பல நிறுவங்களுக்கு கைமாறியிருப்பது தெரிகிறது. கடைசியாக யாரிடம் இருந்ததோ அவர்களிடம் உரிமை பெற்றே மஞ்சுமல் பாய்ஸ் பட நிறுவனம் பாடலை பயனபடுத்தியிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இளையராஜா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் அதன் உரிமை பிரச்சனை இந்தப்பாடலுக்கு வரும் என்பது படக்குழுவினர் நினைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள்தான் படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இறுதியாக இந்த 60 லட்சம் ரூபாய் இளையராஜா தரப்பிற்கு சென்று சேரவில்லை என்றால் அல்லது அவர் சொல்லும் உரிமைத்தொகை அவருக்கு சென்று சேராவிட்டால் அவர் தரப்பில் சட்டப் போரட்டம் தொடரத்தான் போகிறது என்கிறார்கள் இளையராஜா தரப்பில்.
அதற்குள் இணையதளத்தில் இளையராஜா பணம் பறிக்கிறார் என்றும், ரசிகர்கள் ஒருபக்கம் ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லை என்று குஷி மூட் கிளப்பியும் வருகிறார்கள்.