மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் படம் தக் லைப். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் பல இடங்களிலும் நடந்து வருகிறது. பல காட்சிகள் கிராபிக்ஸ் பாணியிலும் எடிக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் திரிஷாவுக்கு முக்கியத்துவம் அதிகம். வழக்கமான நாயகியாக இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இதனால் அவருடைய ரோல் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது இப்போதே பேச்சாக இருக்கிறது. படத்தில் கமல்ஹாசனுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார் அபிராமி. நாசர் என்று கமலுக்கு இஷ்டமான பலரும் பங்கெடுத்திருக்கிறார்கள்.
மணிரத்னம் கமல்ஹாசனுக்காக கொஞ்சம் வேகம் எடுத்திருக்கிறார். அவருக்கு தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க வேலைகள் இருப்பதால் அவரது பகுதிகளை மட்டும் எடுத்து முடித்திருக்கிறார்கள். எப்போதும் போல் இல்லாமல் ஒரே காட்சியை பல முறை எடுத்து வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். மணிரத்னத்திற்கு மட்டும்தான் இப்படி செய்கிறார் கமல் என்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை இருங்காட்டுக்கோட்டை அருகில் உள்ள கார் ரேஸ் நடக்கும் மைதானத்தில் எடுக்கப்பட்டபோது கடுமையான சண்டைக் காட்சிகளில் கமலின் பங்களிப்பு மிரட்டலாக இருந்தது என்கிறார்கள். விக்ரம் படத்தில் சில காட்சிகளை படம்பிடிக்க வெளிநாட்டிலிருந்து புதிய கருவிகளை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். அதே போல இந்த படத்திற்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு முழு படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்காவிலுள்ள கமல்ஹாசனின் ஒப்பனை கலைஞர் ஒருவர் கமலுக்கு உதவியிருக்கிறார். மணிரத்னத்திற்கு அந்த கருவிகளெல்லாம் களத்திற்கு புதிது என்றாலும் காட்சிகளை எடுக்க எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொண்டபோது வியந்து போனாராம்.