பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று இரவு தொடங்குகின்றன இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள வீர்ர்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமத்தை 41 கட்டிட வடிவமைப்பாளர்கள் (ஆர்க்கிடேக்ட்கள்) இணைந்து வடிவமைத்துள்ளனர். 54 ஹெக்டேர் நிலத்தில் இந்த ஒலிம்பிக் கிராம்ம் கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள பல ஸ்டுடியோக்கள் தற்காலிக தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. முன்னணி நாடுகளுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சீன வீர்ர்கள், ஒலிம்பிக் கிராமத்தின் மிக அமைதியான இடத்தில் தங்கள் தங்குமிடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இங்கிலாந்து வீர்ர்கள் தீவுபோன்ற இடத்தில் தங்கள் தங்குமிடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 206 நாடுகள் பங்கேற்கின்றன.
முன்னணி நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட சாய்ஸ், இந்திய வீர்ர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒலிம்பிக் கிராமத்தின் மத்தியில் அவர்கள் தங்குவதற்காக 30 அபார்ட்மெண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய வீரர்கள் தங்கியுள்ள அந்தக் கட்டிடத்தின் அருகில்தான் ரபேல் நடால், நொவாக் ஜோகோவிச் ஆகிய டென்னிஸ் வீர்ர்களும் தங்கியிருக்கிறார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர்ர்களுக்கு உணவளிக்க ஒலிம்பிக் கிராமத்தின் 5 இடங்களில் பிரம்மாண்ட டைனிங் ஹால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக சமைக்க 200 செஃப்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாட்டு வீர்ர்களுக்காக 500 வகையான உணவுகளை தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீர்ர்களின் துணிகளை துவைப்பதற்காக 12 லாண்டரிகளும், 600 வாஷிங் மெஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர்ர்கள் முடிதிருத்திக் கொள்வதற்காக 20 இடங்களில் சலூன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இந்த ஒலிம்பிக் கிராமத்தை பிரித்து 2,800 வீடுகளாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் விளையாட்டு வீர்ர்களுக்காக 16 ஆயிரம் படுக்கைகளும், 3.45 லட்சம் அறைகலன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு அந்த படுக்கைகளை வசதி குறைவான மக்களுக்கு கொடுக்க பிரெஞ்சு அரசு ஏற்பாடு செய்துள்ளது.