இந்திய சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது பாகுபலி படம். இப்போதும் அந்த படங்களைப் பார்க்க ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி உலக அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அதைத்தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர். படம் இன்னும் ஒருபடி மேலே போய் உலக அரங்கில் அவரை அமர வைத்தது. இந்த பெரும் புகழில் ராஜமௌலி அடுத்து என்ன படம் எடுக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
வழக்கம்போல இதுவும் சமூக மற்றும் வரலாற்று பின்புலத்தோடு இந்த படத்தை உருவாக்க இருக்கிறார். இதில் மகேஷ் பாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். இதற்காக மகேஷ்பாபு தலை முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்,. இந்த கதையையும் ராஜமௌயின் அப்பா ராஜேந்திரபிரசாத் எழுத இருக்கிறார். இந்த பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது,. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.ஆர்.ஆர். படத்திற்கான பாடலை ஆஸ்கர் மேடையில் ஒலிக்கச் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களை அவர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதி்ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது ராஜமௌலி கடவுளை நேரில் கண்டேன் என்று சிலிர்த்துப் போய் பேசியிருந்தார்.
இந்த நிலையில் ராஜமௌலியை கவுரவப்படுத்தும் பணியில் நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஒரு வேலையை செய்ய இருக்கிறது. மாடர்ன் மாஸ்டர் என்ற பெயரில் ராஜமௌலியைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் ராஜமௌலியை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அவர் திரைப்படங்கள் பற்றிய தங்கள் பிரமிம்மை வெளிப்படுத்தியிருப்பதையும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படியான ஒரு படத்தை இதற்கு முன்பு எந்த இயக்குனருக்கும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணப்படத்தை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி என்று வெளியிட இருக்கிறார்கள். இது ராஜமௌலிக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கதாநாயகனாக இருப்பவர்களும் ராஜமௌலிக்கு தங்களின் மரியாதையை கொடுத்திருக்கிறார்கள்.
மகேஷ்பாபுவின் படத்தின் கதை விவாதத்தில் தீவிரமாக இருக்கும் ராஜமௌலி பாகுபலி உருவான விதம் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசியிருக்கிறார். இதனால் படம் உருவான மேக்கின் வீடியோக்களும் இருக்கிறதாம். இந்த வீடியோக்களே படத்தைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.