நடிகைகள் தங்கள் சம்பளத்திற்கு இணையாக கவனமாக இருக்கும் இன்னொரு விஷயம் மேக்கப்.. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவர்கள் தங்கள் உடைக்கும் அழகுக்கும் அதிகபட்சமாக செலவு செய்கிறார்கள் என்பதை சமீபத்தில் ஒரு பத்திரிகை எடுத்த சர்வே தெரிவிக்கி்றது. இதனால்தான் ஒவ்வொரு படத்திற்கும் தங்களின் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை விட பிற மொழியில் நடிகைகல் அதிமாக பார்ட்டி கலாச்சாரத்தில் மூழ்கிப்போயிருப்பதால் அடிக்கடி தங்கள் அழகுக்காக அதிக செல்விடுகிறார்கள். அதுவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது அவர்களின் வழக்கம்.
இந்த மோகத்தில் நடிகைகளுக்காகவே நிறைய வெளிநாட்டு அழகு சாதன பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவங்களும் அதனை திரையுலகினர் மத்தியில் கொண்டு சென்று விறபனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளும் அதிக அளவில் மும்பையில் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் திரை நட்சத்திரங்களுக்கு இந்த பொருட்கள் இவர்கள் கைகளுக்குப் பொய் சேர்கிறது. இப்படி கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்திய நடிகை ஒருவருக்கு நடந்த சம்பவம்தான் மும்பை திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சிம்பு கதாநாயகனாக நடித்த வானம் என்ற படத்தில் நடித்தவர் ஜாஸ்மின். மும்பையில் ஆல்பங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக அலவில் பிரபலமானவர் இவரது குழந்தைத்தனமான முகத்திற்காகவே இளம் ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முதன் முறையாக இவர் கிருஷ் இயக்கத்தில் வானம் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். அந்தப்படத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணாக வந்து சிம்புவை காதலிப்பது போல் டேட் செய்யும் காட்சியில் வருவார். இதற்காக பார்ட்டிக்கு போவதற்காக சிம்புவிடம் பாஸ் வாங்கி வைத்திருக்கிய என்று கொஞ்சிப் பேசும் குரலில் இவர் கேட்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் முன்பு மும்பையில் ஒரு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது விலையுர்ந்த காண்டாக்ட் லென்ஸ் போட்டு சென்றிருக்கிறார். அழகுக்காக இதை அணிந்து சென்ற அவருக்கு சில மணி நேரங்களுக்கு கண்களில் பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் பயந்து போன அவர் லெண்சை எடுத்து விட்டார்,. ஆனாலும் அதன் பிறகு கண்களில் பார்பை முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் உடனடியாக நண்பர்கள் துணையோடு மருத்துவரை சந்தித்திருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாஸ்மினுக்கு கருவிழிப்படலம் பாதிக்கபட்டிருப்பதாக கூறினார்கள். ஆனால் சில மணிநேரங்களில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். காண்டாக்ட் லென்சில் இருந்த ஒருவகை வேதிப்பொருளால் ஏற்பட்ட அலர்சி கருவிழியை பாதித்திருக்கிறது என்பதும் இதனை இனிமேல் பயன்படுத்தக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.