இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான சிந்தித்து தனது திரைப்படங்களை எடுப்பதில் பெயர் எடுத்தவர். இவரது ரசிகர்களாக அமெரிக்காவை சேர்ந்த சிலர் இணைந்து பார்த்திபன் இயக்கத்தில் புதிய படத்தை இயக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு தொடங்கினார்கள். டீன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தனது படமும் வெளியாகும் என்று அறிவித்தார் பார்த்திபன். இதுவே அவரது நம்பிக்கையைக் காட்டுவதாக பலரும் பேசி வந்த நிலையில்; தர்போது படம் இருவேறு கருத்துக்களை விமர்சனம் மூலம் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
குழந்தைகள் 13 பேரையும் நடிக்க வைத்து வேற்றுக்கிரக விண்கலம் பூமியில் நடத்தும் ஆய்வு பற்றி எடுத்திருந்தார். இது பலருக்கு பிடிக்காமல் போனது இதனால் விமர்சனங்கள் எல்லாம பார்த்திபனுக்கு எதிராக வெளிவந்தன. இதனால் பார்த்திபன் இந்த விமர்சங்களுக்கு பதில் சொவது போல சில கருத்துக்களை பேசியிருந்தார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. ஒரு என்படத்தில் தமன்னா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமன்னா படத்திற்குத்தான் கதை தேவை இல்லை என்பது போல் பேசியிருந்தார். இது பார்த்திபனுக்கு எதிராக பகையை வலர்த்து விட்டிருக்கிறது. பலரும் பார்த்திபனுக்கு எதிராக கருத்துகளை இணையத்தில் எழுதி வருகிறார்கள்.
இதனால் பார்த்திபன் இது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். நான் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமன்னா நடித்தால் படத்திற்கு கம்ர்சியலாக இருக்கும் என்பதால்தான் அப்படி சொன்னேன் என்று மறுத்திருக்கிறார். என்ன சொன்னாலும் இப்போதும் பார்த்திபன் கருத்திற்கு எதிராக பதிவு வந்து கொண்டுதான் இருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படத்தில் வெளியான முதல் பாடலான காவாலா என்ற பாடலை தமன்னாவை வைத்து வெளியிட்டபோது அது பட்டி தொட்டியெல்லாம் பரவி பலரையும் ஆட்டம் போட வைத்தது. இது படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே பாடலுக்கு விஐபிகள் பலரும் ஆடி பதிவிட்டனர். இதனால் தமன்னாவுக்கு பெரிய ஒப்பனிங் கிடைத்தது. பல புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை மனதில் வைத்துதான் பார்த்திபன் இதை பேசியிருப்பார் என்ற கருத்தும் பரவியது.