மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகான முதலாவது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்தார். தில், 2023-24 (ஏப்ரல் 2023- மார்ச் 2024) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
2024 – 25-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயரும்.
2022 ஜனவரி-நவம்பர் காலத்தில் சராசரியாக 30.5 சதவீதத்திற்கும் அதிகமாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கான கடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
உண்மையான அளவீட்டின் அடிப்படையில் 2024-ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.
மார்ச் 2023-ல் முடிவடையும் ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீதத்தில் (உண்மை அளவுகளில்) வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய நிதியாண்டின் 8.7 சதவீத வளர்ச்சியின் தொடர்ச்சியாகும்
நிதியாண்டு 2023 – 2024-ன் முதல் எட்டு மாதங்களில் 63.4 சதவிகிதம் அதிகரித்த மத்திய அரசின் மூலதனச் செலவு (CAPEX), வளர்ச்சிக்கு மற்றுமொரு உந்துதலாக இருந்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது தனியார் நுகர்வு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றால் முதன்மையாக வழிநடத்தப்பட்டது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் விரைவான நிகரப் பதிவு போன்றவற்றின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க உதவியதன் விளைவாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைவதையும் காண முடிந்தது
2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நீட்டிக்கப்பட்ட அவசரக் கடன் இணைக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) ஆதரவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறைக்கான கடன் வளர்ச்சி, சராசரியாக 30.6 சதவீதத்திற்கும் மேலாக, குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.
மத்திய அரசின். MSMEகளின் மீட்சி வேகமாக உள்ளது என்பதை அவர்கள் செலுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அளவுகளில் இருந்து தெளிவாகத் தென்படுகிறது.