பாலிவுட் திரையுலகில் பார்ட்டி கலாச்சாரம் என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. இந்த பார்டிகளில்தான் இயக்குனர்கள் கதாநாயகர்களை தேர்ந்தெடுப்பதும், அவர்களை தங்கள் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்வதுமான நிகழ்வுகள் நடக்கும். இதில் பல கதாநாயகிகளும் கலந்து கொள்வார்கள். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டி மும்பையில் நடந்தது. அதில் நடிகை உர்பி ஜாவேத் கலந்து கொண்டார்.
பார்ட்டி முடிந்து வெளியில் வரும் அவர் அளவுக்கு அதிகமான மது அருந்தி நடக்க முடியாமல் தடுமாறியதுமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதில் அவர் தந்து காருக்குப் போக முடியாமல் கால்கள் தடுமாறியபடி வருவதும் அவரை பக்கத்திலிருக்கும் ஒரு பெண் கைத்தாங்கலாக பிடித்து காரில் அமர வைக்கும் அந்த வீடியோ இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
உர்பி ஜாவேத் பாலிவுட்டில் மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர் அதிகமாக மியூசிக் ஆல்பங்கள் மூலம் கவர்ச்சி வீடியோக்களில் அதிகம் பேசப்பட்டார். மாடலிங் ராம்ப் வாக்கிங் நேரங்களில் இவர் அணிந்து வரும் உடைகள் பரபரப்பு ஆனது. இப்படியாக அதிகம் பேசப்பட்டு வந்தார். உர்பி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மூலம் அதிகம் கவனம் ஈர்த்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அதன் மூலமும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது இந்த தள்ளாட்ட வீடியோ வெளியானது. இந்த மாதத்தில் மட்டும் 3 வது வீடியோ இது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பும் வேறொரு பார்ட்டியில் கலந்து கொண்ட உர்பி ஜாவேத் இதே போன்று தடுமாறி வந்து காரில் அமர்ந்து கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியானது. இரண்டாவதாக வெளியான வீடியோவில் கொஞ்சம் தெளிவாக இருந்த உர்பி பப்பராசிகள் போட்டோ எடுப்பதற்கு வசதியாக போஸ் கொடுத்து விட்டுப் போனார்.
இது மூன்றாவது முறையாகும். பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளைவிட அதிகமாக மீடியாக்களில் பேசப்படும் நபராக இருந்து வருகிறார் உர்பி ஜாவேத்.
அவரது உடைகளை அதிகமாக ட்ரோல் செய்து கலாய்ப்பது இணையவாசிகளுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. உர்பி ஜாவேத்தும் இது பற்றி கவலைப் படுவது இல்லை. அடுத்த நாளே அதைவிட படு மோசமான ஆடையை அணிந்து வந்து நிற்பார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படித்தான் இவர் அதிகம் பேசுபொருளாக இருக்கிறார்.
நேற்றைய வீடியோவில் உர்பி காருக்குள் அமர்ந்து கைப்பையிலிருந்து பணத்தை எடுக்கிறார். ஆனால் அவர் பணத்தை எடுப்பதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் கைகளை உள்ளே விட்டு உர்பி கையிலிருக்கும் பணத்தைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள். இது இன்னும் படபடப்பை அதிகப்படுத்தியது. இந்த செயலைப் பார்த்த நெட்டிசன்கள் இது மிகவும் தவறான போக்கு உதவும் குணம் உள்ளதும் சரியாக இல்லை. அவர் கையிலிருந்து பறிக்கும் செயலும் சரியாக இல்லை. என்று அவரை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிரபலமாக இருப்பவர்கள் பொது இடத்தில் இது போல நடப்பது மும்பையில் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இதனால்தான் பப்பராசிகள் விஐபிகளை பொது வெளியில் தொடர்ந்து பின் செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அவர்களின் சுதந்திரமும் பறிபோகிறது.