தமிழ் சினிமாவில் நயன் தாராவின் பங்கு இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு சாதனைதான். எப்போதும் திருமணமான பெண்களுக்கு அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு கிடைக்காமல் போகும். மீண்டும் அவர்கள் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கும் இதுதான் முன்பு இருந்த நிலை. ஆனால் அதை உடைத்திருக்கிறார் நயன் தாரா. தனக்கான கதைகளை தானே தேர்ந்தெடுத்து அதில் கதை முழுக்க தம்மை சுற்றி இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். எந்த ஹீரோவுக்கும் காதலியாக வந்து டம்மியாக நடித்து விட்டுப் போக ஒத்துக் கொள்வது இல்லை.
இது குறித்து அவர் ஒரு தனது பேட்டியில், சினிமாவில் எப்போதும் நடிகைகளுக்கு இரண்டாவது இடம்தான். சினிமா தொடர்பாக நடக்கும் விழாக்களிலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படி ஒரு நாள் விழாவுக்கு சென்றபோது எனக்கு நடந்த சங்கடத்திற்குப் பிறகு நான் எந்த சினிமா விழாக்களுக்கும் போவதில்லை என்ற முடிவை எடுத்தேன். என்று அவர் பேசியது திரையுலகையில் சலசலப்பை ஏற்படுத்தியது ஆனால் அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் படங்களில் கவனம் செலுத்தினார்.
நயன் தாரா இந்த ஸ்டேட்மெண்ட் பல இளம் இயக்குனர்களை பெண்களுக்கான கதைகளோடு நயன் தாரா பக்கம் அழைத்து வந்தது. அப்படி அவர் தேர்வு செய்த பல கதைகள் படமாகி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்தது. அப்படி அவர் நடித்த படங்களுல் ஒன்றுதான் ஐரா. இதனை சர்ஜன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். படமும் திகில் கதை என்பதால் ரசிகர்களிடம் வெற்றியை பெற்றது. இது மாதிரி தயாரான படங்களின் பட்ஜெட் என்பது நயன் தாராவின் சம்பளம் மட்டும்தான் பெரிய தொகை. அதனால் நஷ்டம் ஏற்படுபது தவிர்க்கப்பட்டது.
இப்போதும் நயன் தாரா நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் ஐரா திரைப்படம் எடுத்த இயக்குனர் சர்ஜன் மீண்டும் நயன் தாராவுக்கு கதை சொல்ல வந்திருக்கிறார். அவர் கதையை கேட்ட நயன் தாரா நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் சம்பளம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியபோதுதான் சிக்கல் தொடங்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நயன் தாராவின் சம்பளம் 6 கோடி என்ற நிலையில் ஐரா படத்தில் நடித்தார். ஆனால் இன்று அவரது நிலைக்கு சம்பளம் என்பது 15 கோடி என்று பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது தயாரிப்பு தரப்பில் தயக்கம் காட்டவே அதிலிருந்து குறைத்து சொன்ன தொகையும் கட்டுபடியாகாமல் தயாரிப்பு தரப்பு படத்தை அப்படியே கைவிடுவதாக சொல்லியதாக தகவல் பரவியது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, நயன் தாராவுக்கு நெருக்கமான தரப்பு அப்படியெதுவும் நடக்கவில்லை. தயாரிப்பு தரப்பும், இயக்குனரும் நயன் தாராவுக்கு நட்பாக இருப்பவர்கள்தான். படத்தை கைவிடவில்லை. நயன் தாரா தற்போது நடித்து வரும் சம்பளத்தையே அவருக்கு கொடுக்க இருக்கிறோம். அதனால் படத்தை பூஜையுடன் விரைவில் தொடங்க இருக்கிறோம் என்றர்கள். நயன் தாராவை பொறுத்தவரை சம்பளம் என்பது அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. தனக்கான மரியாதையும் மனதுக்கு பிடித்த இடத்தில் பணி செய்வதும்தான் அவருக்கு முக்கியம். நண்பர்களுக்காக பணத்தை குறைத்துக் கொள்ளவும் தயங்கமாட்டார் என்றார் ஒரு உதவி இயக்குனர்.