No menu items!

நடக்கப் போகிறார் விஜய் – நடத்தப் போகிறார் மாநாடு!

நடக்கப் போகிறார் விஜய் – நடத்தப் போகிறார் மாநாடு!

நடிகர் விஜய் தனது திரைப்படங்களை வேகமாக முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். இதற்காக அரசியல் களப்பணிகளை திட்டமிடுவதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் விஜய்யின் அரசியல் குறித்தான அனைத்து நகர்வுகளையும் முடிவு செய்ய இருக்கிறார்கள். ஆந்திரா அரசியலை முன்வைத்து விஜய் தனது கணக்கை தொடங்க இருக்கிறார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆந்திரா முழுவதும் நடைபயணத்தை தொடங்கினார். இதில் அவருக்கு மிகப்பெரிய மக்கள் செல்வாக்குக் கிடைத்தது. சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து முதலமைச்சராக பதவில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து ஜெகன் மோகனை எதிர்த்து நடிகர் பவன் கல்யாண் தனது நடைபயணத்தை தொடங்கினார். இவருக்கும் போகும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக கிடைத்தது. அரசுக்கு எதிராக இஅவர் எழுப்பிய குரலுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரியாக்ஸன் இருந்தது. இப்போது பவன் கல்யாண் ஆந்திராவில் துணை முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்திருக்கும் விஜய் இதே பாணியில் தமிழகம் முழுவதிலிலும் தனக்கான மக்கள் ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்க இருக்கிறார். இந்த நடைபயனம் பிரமாண்டமாக அமையவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அதற்கு முன்பாக கட்சிக்கு அங்கீகாரம் செய்யப்பட்ட கொடியை தனது தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டுமே ? அதற்கு என்ன வகையான சின்னத்தை பயன்படுத்துவது என்பதௌ அவரது யோசனையாக இருக்கிறது. இன்னும் வாரங்களில் கொடியை அதிகாரப்பூர்வமாக பறக்கவிட திட்டம் இருக்கிறது. அது வரும் ஆக்ஸ்ட் 15ம் தேதியாக இருக்கலாம் அல்லது காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியாக இருக்கலாம் என்கிறார்கள்.

இந்த நடைபயணம் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. முதற்கட்டத்தில் தென்மாவட்டங்களில் சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கிருந்து தொடங்க இருக்கிறார் என்கிறார்கள். நடைபயணம் முடிந்ததும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்தவும் யோசனை இருக்கிறது. இதனை அவருக்கு எப்போதும் நெஞ்சுக்கு நெருக்கமான தூத்துக்குடி பகுதியில் நடத்தலாமா ? அல்லது தூங்கா நகரமான மதுரையில் நடத்தலாமா? என்று ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விஜய்யின் இந்த முதல் மாநாடு மற்றும் நடைபயணம் ஆளும் தரப்பு எந்தமாதிரியான ரியாக்‌ஷன் காட்டப்போகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகள் எந்த அளவுக்கு விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் என்பதுதான் விஜய்க்கு உள்ளுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பு இதை தெரிந்துகொள்ள சிலரை இப்போதே அவர்களிடம் தூது அனுப்பி பல்ஸ் பார்த்திருக்கிறாராம்.

முதல் மாநாட்டிற்கும், நடைபயணத்திற்கும் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிக தொண்டர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...