நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள டாக்குமெண்டரி சீரியஸ் ‘தி மேன் வித் 1000 கிட்ஸ் (The Man with 1000 Kids)’. ஜொனாதன் ஜேகப் என்ற நெதர்லாந்துகாரர் பற்றியதுதான் இந்த சீரியஸ். விந்தணு தானம் மூலமாக 1000 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார், ஜொனாதன் ஜேகப்.
நெதர்லாந்தில் விந்தணு தானம் செய்பவர்கள், 25 குழந்தைகளின் பிறப்புகளில் மட்டுமே பங்கு வகிக்கும் வகையில் சட்ட விதி அமலில் உள்ளது. ஆனால், அந்நாட்டில் மட்டும் 100 குழந்தைகள் பிறப்பதற்கு ஜொனாதன் விந்தணு தானம் செய்துள்ளார். இதனால், கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானம் செய்யக்கூடாது என்று 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. ஆனால், தனது அடையாளத்தை மறைத்து தொடர்ந்து விந்தணு தானம் செய்து வந்துள்ளார் ஜொனாதன் ஜேகப்.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஜொனாதன் ஜேகப் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை என்று தகவல் வெளியானபோதுதான் ஜொனாதன் விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து தொடர்ந்த விசாரணையில், ஜொனாதன் தொடர்ந்து விந்தணுக்களை விற்றார் என்றும், உலகம் முழுவதும் சுமார் 1,000 குழந்தைகளின் பிறப்பில் அவர் ‘பங்களித்துள்ளார்’ என்றும் டச்சு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் தெரிந்தே அவர் பொய் சொல்லியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜொனாதன் 17 ஆண்டுகளாக ரகசியமாக இதைச் செய்து வந்துள்ளார். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு செல்வதற்குப் பதிலாக விந்தணுவுக்கான தேடலில் உள்ள குடும்பங்களை நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத் தொடரில், ஜொனாதனின் விந்தணுவைப் பயன்படுத்திய பல பெண்கள் தங்கள் தரப்பை முன்வைத்துள்ளனர். ஜொனாதனின் இந்த நடவடிக்கையானது தங்கள் குழந்தைகளுக்கு ’இன்ஸெஸ்ட்’ (உறவினர்களுக்கு இடையிலான பாலியல் தொடர்பு) அபாயத்தை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “இந்தக் குழந்தைகள் ஒரு நாள் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கக்கூடும். மேலும் தாங்கள் ஒரே டோனர் மூலம் பிறந்தவர்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்,” என்று நதாலி என்ற பெண் கூறியுள்ளார்.
ஜொனாதனின் வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மேலும் விந்தணு தானம் செய்யத் தடை விதித்துள்ளார். மேலும், ஒவ்வொரு விந்தணு தானத்திற்கும் அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சரி, ஜோனாதன் இதுபற்றி என்ன சொல்கிறார்?